ஒற்றன்..!

November 2022

மக்கள் வரிப்பணத்தில் மணைவிக்கு சேலை வாங்கும் வடக்கு அதிகாரி ..

மக்கள் அபிவிருத்தி திட்டங்களை தட்டிக் கழிப்பதும் திட்டங்களில் கொமிஷன் அடிப்பதும் ஆக செயற்பட்ட அதிகாரி ஒருவர் வட மாகாணத்தில் இருந்து விரைவில் வெளியேற்றப்படப் போவதாக அலசல் புலசலான கதைகள் அடிபடுகிறது.

யார் இந்த அதிகாரி அவர் என்ன பதவியில் இருக்கிறார் என்பது அனைவருக்கும் அறிய ஆவலாகத்தான் இருக்கும்.

ஒற்றனும் அந்த அதிகாரியை தேடுவதில் சற்று ஆர்வமாக இருந்த நிலையில் அவரே தனக்கு நம்பிக்கையான சிலரிடம் முணுமுணுத்து விட்டார்.

யார் அந்த அதிகாரி என்ன செய்தார் எப்படி மாட்டினார் என்பது சுவாரசியமான விடயம் தான்.

பெரும்பாலும் இவராகத்தான் இருக்கும் என்பது ஒற்றனுக்கு மட்டுமல்ல அனைத்து அதிகாரிகளுக்கும் தெரிந்திருக்கும்.

இந்த அதிகாரியின் குண அதிசயங்களை கூறினால் சிலர் அவரை மட்டுப் பிடித்து விடுவார்கள் இருந்தாலும் அவரைப் பற்றி கூறியே ஆக வேண்டும்.

இவர் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த அதிகாரி வீடு செல்லும் போது பிள்ளைகளுக்கு ஏதேனும் வாங்கிச் செல்வதை விட மனைவிக்கு எதையாவது வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் மிகவும் அக்கறையாகச் செயல்படுபவர் .

பெரும்பாலும் வீடு செல்லும் போது 10 சாறியாவது வாங்கிச் செல்வது அவருடைய பழக்கமாக இருக்கும் நிலையில் வாங்கிய சாறிகள் அனைத்து தன்னுடைய பணத்தில் இல்லை என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும்.

ஒருவேளை அவருடைய மனசாட்சிக்கு உண்மை தெரிந்திருந்தாலும் எத்தனை நாட்களுக்குத் தான் மனட்சாட்சியும் உள்ளதை உறுத்துறது.

ஒருமுறை ஒரு அதிகாரி கேட்டார் ஏன் சார் நீங்கள் வீடு செல்லும் போது மனைவிக்கு சாறி சாறியாக வேண்டுகிறீர்கள் என.

அப்போது அந்த அதிகாரி கூறினார் எனது மனைவி சாறிக்கு மட்டும்தான் மயங்குவார் என

இருந்தாலும் அந்த ஆளிடம் நல்ல விஷயமும் காணப்பட்டது என்னவென்றால் தான் தனது மனைவிக்கு சாறி வேண்டும் போது தனது மேல் அதிகாரிக்கும் ஒரு சாறியை வாங்கி உங்கள் மனைவிக்கும் கொடுங்கள் என மேசையில் வைத்து விடுவார்.

அவ்வாறு வைக்கும் சந்தர்ப்பத்தில் அந்த மேலதிகாரி எவ்வளவு காசு இந்தா பிடி என தனது பேசை திறக்க ஆரம்பித்ததும் இல்லை இல்லை வைத்துக் கொள்ளுங்கள் இது அந்த திட்டத்தில் வந்த காசு என சிரித்தபடியே கூறி விடுவார்.

இவர் தான் அந்த அதிகாரி வெளியேற்றப்படும் போது அறியுங்கள் மக்கள் வரிப்பணத்தில் தனது மனைவிக்கு சாறி வாங்கி அழகு பார்க்கும் உத்தம புருஷன் யார்? என