May 2022
யாழ் மாவட்டத்தில் சுகாதார விடையங்களில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் சுட்டிக்காட்டும் வைத்திய அதிகாரிகள் மீது வடமகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் நொண்டிச் சாட்டுக்களை கூறி விசாரணை குழு அமைத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அண்மையில் தெல்லிப்பழை பதில் சுகாதார வைத்திய அதிகாரி வலிவடக்கு பிரதேச சபையின் கழிவகற்றலில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் சுட்டிக்காட்டி பொறப்பானவர்களுக்கு கடிதங்கள் அனுப்பியுள்ளாராம்.
இவ்வாறு கடிதங்கள் அனுப்புவதால் தமது பதவிக்கு ஏதேனும் இடையூறுகள் வந்து விடுமோ என நினைத்து குறித்த வைத்தியரை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கையில் வடமாகாண சுகாதார பணிப்பாளர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
வடக்கு மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி வழங்களில் மோசடி மற்றும் யாழ் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட மூன்று இடைத்தங்கல் முகாம்களில் பல லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் காணாமல் போனமை தொடர்பில் வடமாகாண சுகாதார பணிப்பாளர் ஏன் விசாரணைக் குழு அமைக்காமல் மௌனமாக இருக்கிறார் என்ற கேள்வியும் எழுகின்றது.
அதுமட்டுமல்லாது மந்திகை ஆதார வைத்தியசாலையில் அண்மையில் கட்டப்பட்ட கட்டடம் அனுமதியின்றி கட்டப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் பட்ட நிலையில் ஏன்? விசாரணை குழு அமைக்காமல் மொனம் காக்கிறார்.
மேலும் மந்திகை ஆதார வைத்தியசாலையில் ஊழியர் நலன்புரி சங்கம் இதுவரை கணக்கறிக்கை காட்டாமல் பல மோசடிகள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் ஏன் விசாரணைக்குழு அமைக்காமல் மௌனமாக இருக்கிறார்.
அன்மையில் வேலனை வைத்தியசாலையில் குடும்பப் பெண்ணொருவர் சிகிச்சைக்காக சென்ற நிலையில் வைத்தியர் இன்மையால் குறித்த பெண் இறந்த சம்பவம் தொடர்பில் வடமாகாண ஆளுநரின் பணிப்புரைக்கமைய சுகாதார அமைச்சின் செயலாளரால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கைக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சுமார் பதினைந்து வருடங்களுக்கு மேலாக யாழ் பிராந்திய சுகாதார பணிப்பாளர் மற்றும் மாகாண சுகாதார பணிப்பாளராக கடமையாற்றும் கேதீஸ்வரன் வடக்கு சுகாதார துறையில் இடம்பெற்ற பல்வேறு ஊழல் மோசடிகளை கண்டும் காணாமல் இருப்பது அவருக்குத் தெரிந்துதான் இடம் பெற்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.
ஆகவே நேர்மையான அதிகாரிகளினால் தமது பதவிக்கு இடையூறு ஏற்பட்டு விடுமோ என்பதற்காக மக்களின் சுகாதார நலன்களை பேணும் வைத்தியர்கள் மீது அழுத்தங்கள் பிரயோகிப்பதும் நொண்டிச் சாட்டுக்களை கூறி விசாரணை குழு அமைப்பதும் மக்களின் நலன்களில் விளையாடுவதாகவே அமையும்.