April 2023
உடுவில் மகளிர் கல்லூரியில் ஆசிரியராக நுழைவதற்கு பொருளியல் பாட ஆசிரியர் ஒருவர் மீது பெண் மாணவிகளை தூண்டிவிட்டு குளிர் காய்கிறார் டனியல் சாம்.
யார் இந்த டானியல் சாம் இவருக்கும் உடுவில் மகளிர் கல்லூரிக்கும் என்ன தொடர்பு என தேடிய போது பல விடயங்கள் அம்பலத்துக்கு வந்தது.
கடந்த காலத்தில் உடம்பில் மகளிர் கல்லூரி அதிபருக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் செய்யத போது சில மாணவிகளை ஆபாச வார்த்தைகளால் பேசியது.
போராடிய மாணவிகள் சிலரின் அங்கங்களை தொட்டது என இந்தப் பொருளியல் ஆசான் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அக்காலத்தில் எழுந்தன.
அதன் பின்னர் 2019 பிற்பட்ட காலப்பகுதியில் பாடசாலைகளிடம் பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் சக ஆண் ஆசிரியருக்கு அடித்தார் தற்போதும் அவ் வழக்கு இன்னும் நிறைவடையாமல் தொடர்ந்து கொண்டே உள்ளது.
டானியல் சாம் கணக்கீடு பாடத்தில் கில்லாடி ஆசான் என அறியக் காட்டிலும் அவரின் கற்பித்தலில் பாலியல் அடைமொழிகளை பொருத்தி கற்பிப்பதில் சாம் ஐ அடிச்சுக்க அலில்லை .
சரி இப்போது விடயத்துக்கு வருவோம் அண்மைய நாட்களில் முடிவில் மகளிர் கல்லூரியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுடன் பாலியல் நீதியில் கருத்துக்களை பரிமாறுவதாக சாம் என்ற பிரபல ஆசிரியர் youtube தளத்தில் கருத்துக்களை பதிவிட்டார்.
அதுமட்டுமல்லாது யாழ் மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு தரப்பினரின் முகநூல்களில் மற்றும் வாட்சப் குரூப்புக்கலிலும் இவருடைய கருத்துக்கள் வலுக்கட்டாயமாக உள் நுழைக்கப்பட்டிருந்தது.
உடுவில் மகளிர் கல்லூரியில் கல்வி கற்பிக்காத சாம் ஏன் இவ்வளவு அக்கறையாக செயல்படுகிறார் என தேடி பார்த்தபோது பல விடயங்கள் அம்பலத்துக்கு வந்தது.
கணக்கீட்டுப் பாடத்திற்கு உடுவில் மகளிர் கல்லூரியில் நிரந்தர ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்ட நிலையில் அவர் தொடர்பிலே இவ்வாறான கருத்துக்கள் பதிவேற்றப்பட்டுள்ளது.
உடுவில் மகளிர் கல்லூரியில் இருந்து சகா ஆசிரியர் ஒருவருடன் அடிதடியில் ஈடுபட்டு தானாகவே விலகிக் கொண்ட சாம் மீண்டும் அதே கல்லூரியில் இணைவதற்கு சில மாணவர்களை பகடைக் காய்களாக பயன்படுத்துவது அம்பலத்துக்கு வந்தது.
ஒரு ஆசிரியர் மாணவர்களுடன் பாலியல் நீதியான கருத்துக்களை பரிமாறுகிறார் என்றால் வகுப்பில் உள்ள ஒட்டுமொத்த மாணவர்களும் எதிராக கிளம்புவார்கள்.
ஆனால் இந்த விடயத்தில் வெறும் ஐந்து மாணவர்கள் எதிராக கிளம்பியதுடன் ஒரு மாணவி மட்டும் பாடசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.
இந்த மாணவிகளின் பின்புலத்தில் சாம் என்ற ஆசிரியரின் பங்கு தெளிவாக உள்ளமை வெளியில் கிடைத்த ஆதாரங்கள் மூலம் புலப்படுகிறது.
குறித்த பாடசாலையில் இடம் பெற்ற சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் மாணவியால் முறைப்பாடு செய்யப்படவில்லை.
அதுமட்டுமல்லாது மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் தனக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் தெளிவாக கூறாத மாணவி பாடசாலையில் பாலியல் தொந்தரவு இருப்பதாக ஆசிரியர் ஒருவரின் பெயரை கூறி முறை பாடு செய்யப்பட்டுள்ளது.
உண்மையில் இந்த இரு முறைப்பாடுகளையும் பாதிக்கப்பட்டதாக கூறும் மாணவிதான் நேரில் சென்று வழங்கினாரா? அல்லது அவருடைய பெயரில் எழுத்து மூலமாக கடிதம் சென்றதா? என்ற கேள்வி பலமாக எழுதுகிறது.
சாம் என்ற நபர் உடுவில் மகளிர் கல்லூரிக்குள் செல்வதாயின் தனது பாடமான பொருளியல் பாடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியரை வெளியேற்ற வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
அதற்காக கையில் எடுக்கப்பட்டது ஒட்டுமொத்த உடுவில் மகளிர் கல்லூரியின் பெயரை சந்தி சிரிக்க வைத்தாவது நான் உள் நுழைய வேண்டும் என்ற இறுமாப்பும் ஆணவமும் டானியல் சாம் என்ற கற்றறிந்த ஆசானுக்கு ஏற்பட்டது.
தனியார் கல்வி நிலையத்தில் மாணவர்களின் பணத்தை சுரண்டும் ஆசான்சாம் இது போன்ற நாகரீகமற்ற செயற்பாடுகள் மூலம் உடுவில் மகளிர் கல்லூரிக்குள் நுழைவது கல்லூரியை மேலும் பலவீனப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
பதிவு செய்யப்பட்டாத வைத்திய நிலையமொன்றை நடத்தி, போலி வைத்தியத்தின் மூலம் பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாக பல தரப்பினராலும் எச்சரிக்கப்பட்ட உரும்பிராயை சேர்ந்த நபர் ஒருவரை யாழ் நீதவான் நீதிமன்றம் கடுமையாக எச்சரிக்கப்பட்டு பிணையில் செல்ல அனுமதித்தது.
சம்பவம் தொடர்பில் தெரிவதாவது யாழ்ப்பாணம், உரும்பிராயை சேர்ந்த கதிரவேலு ரகுராம் என்ற நபர், சிகிச்சை நிலையமொன்றை நடத்தி வந்தார்.
அக்குபஞ்சர் வைத்தியமளிப்பதாக குறிப்பிடப்பட்ட போதும், அது பதிவு செய்யப்பட்ட வைத்திய நிலையமாக இயங்கவில்லை என்ற குற்றச்சாட்டு பலராலும் முன்வைக்கப்பட்டது.
“அங்கு சிகிச்சை பெற்ற சிலர் மரணமடைந்ததை தொடர்ந்து, மரணங்கள் தொடர்பில் ஆராய்ந்த போது, அந்த போலி வைத்திய நிலையம் பற்றிய தகவல் தெரிய வந்தது“ என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை கிளை அண்மையில் தெளிவுபடுத்தியிருந்தது.
அது பதிவு செய்யப்பட்டாத போலி வைத்திய நிலையம் என்பது தெரிய வந்ததையடுத்து, இந்த விவகாரம் விஸ்பரூபம் பெற்றது.
ஆரம்பத்தில் அக்குபஞ்சர் சிகிச்சையளிப்பதாக குறிப்பிடப்பட்ட போதும், பின்னர் நாடி வைத்தியர், கீலிங் சிகிச்சை என குறிப்பிடப்பட்டது. சட்ட நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்க இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கலாமென கருதப்பட்டது. அத்துடன், தன்னை தெய்வ வைத்தியராகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
உரும்பிராயில் போலி வைத்தியம் மூலம் பொதுமக்கள் ஏமாற்றப்படுவதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியும் விழிப்புணர்வு பதிவொன்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
போலி வைத்திய நிலையத்தை நடத்துயது மட்டுமல்லாமல், உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆங்கில வைத்தியம் தொடர்பில் தவறான கருத்துக்களை பரப்பி பொதுமக்களை திசைதிருப்பி வந்ததுடன், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரிக்கு எதிரான அவதூறுகளையும் பரப்பி வந்துள்ளார்.
இந்த நிலையில், யாழ் போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். அதையடுத்து, நேற்று முன்தினம் புதன்கிழமை யாழ் பொலிஸ் நிலையத்திற்கு ரகுராம் என்ற நபர் அழைக்கப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இன் நிலையில் நேற்று வியாழக்கிழமை அவரை கோப்பாய் பொலிஸார் யாழ் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
ரகுராம் சார்பில் சட்டத்தரணி வி.திருக்குமரன் முன்னிலையாகினார்.
ஆங்கில வைத்திய முறைக்கு எதிரான போலித் தகவல்களை பரப்புவது, வைத்தியர்களுக்கு எதிரான அவதறு பரப்புவது போன்றவற்றிற்கு நீதிபதி கடுமையான எச்சரிக்கை செய்து பிணையில் விடுத்தார்.75
தனது வாடிக்கையாளர் இவ்வாறான பிழையான நடவடிக்கைகளில் இனிமேல் ஈடுபட மாட்டார் என சட்டத்தரணி வி.திருக்குமரன் மன்றில் குறிப்பிட்டார்.
இதையடுத்து, ரகுராமை கடுமையாக எச்சரித்த, நீதவான் வழக்கை ஒத்தி வைத்தார்.
வலி.வடக்கு பிரதேசசபை முன்னாள் தவிசாளரான காதலன் வீட்டில் தீயில் எரிந்த பெண் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண், நேற்றிரவு முன்னாள் தவிசாளரின் வீட்டுக்கு முன் வந்து, தனக்குத் தானே தீ மூட்டியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்ற நிலையில் கொலையா? அல்லது தற்கொலையா ? என்ற சந்தேகங்கள் எழுகின்றது.
வலி வடக்கின் முன்னாள் தவிசாளர் யார்? உயிரிழந்த பெண்ணுக்கும் என்ன தொடர்பு என தேடிப்பார்த்தபோது.
தமிழரசு கட்சியின் உறுப்பினரான காமக் காதலன் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்டு தவிசாளராக தேர்வு செய்யப்பட்டார்.
தமிழரசு கட்சியினுடைய தலைவர் மாவை சேனாதிராஜாவின் மீது கொண்ட அளவற்ற காதல் காரணமாக அவரின் பிரத்தியேக செயலாளராக நீண்டகாலம் கடமை ஆற்றி வந்தார்.
தனது கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜாவை தோற்கடிப்பதற்கு தமிழரசு கட்சியின் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருடன் இணைந்து பல சதித்திட்டங்களை தீட்டினார்.
வடமாகாண சபையில் அமைச்சர் பதவி ஒன்றை பெற்று தருவதாக ஆசை வார்த்தை கூறிய பாராளுமன்ற உறுப்பினருக்காக தலைவரேயே தோற்கடிப்பதற்கு ஒரு வகையில் காரணமாகவும் இருந்தவர்.
அதன்பின் தமிழரசு கட்சியினுடைய தலைவரால் ஓரங்கட்டப்பட்ட நிலையில் தனக்கு பதவி வாங்கித்தருவதாகக் கூறிய தலைவருடன் வெளிப்படையாகவே நிகழ்வுகளில் பங்கெடுத்தார்.
இது அரசியலில் எல்லாம் சகஜம் என்பார்கள் அது ஒரு புறம் இருக்கட்டும் உயிரிழந்த பெண் யார் அவருக்கும் வலி வடக்கு காதல் தவிசாளருக்கும் என்ன தொடர்பு என ஆராயலாம்.
திருமணம் ஆகி ஒரு ஆண் ஒரு பெண் பிள்ளைகள் இருக்கின்றார்கள் முதல் மனைவிக்கும் வலி வடக்கு காதலனுக்கும் ஏற்பட்ட முரண்பாடு முதல் மனைவி கணவனை ஏற்க மறுத்து விட்டாள்.
முன்னாள் தவிசாளரின் முன்னாள் மனைவிக்கு இரு பிள்ளைகள் ஒருவர் வெளிநாட்டில் முன்னாள் மனைவியுடன்.
வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என ஊர் ஊராய் உரத்துப்பேச ஒற்றை ஆட்சி அரசின் இலங்கை காவல்துறையின் கீழ் பணி புரியும் வாய்ப்பை மகன் பெற்றுக் கொண்டார்.
வெள்ளவத்தைப் பொலிசில் பொலிஸ் கொஸ்தபல் ஆக கடமை ஆற்றிய நிலையில் தற்போது காங்கேசன் துறைப் போலீஸ் நிலையத்தில் கடமை ஆற்றுகிறார்.
வலி வடக்கு பிரதேச சபையின் மல்லாக உப அலுவலகத்தில் கடமையாற்றிய உயிரிழந்த பெண் தனது கணவனை பிரிந்து வாழுகின்ற நிலையில் அவருக்கு 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒன்றும் உள்ளது.
அறிந்த வகையில் வலி வடக்கு முன்னாள் தவிசாளரான காதலனுடன் குறித்த பெண்னுக்கும் காமத் தொடர்புகள் நீண்டகாலமாக இருந்து வந்துள்ளதாகத் அறியக்கிடைக்கும் நிலையில் திருமணம் செய்யுமாறு உயிரிழந்த பெண் பல தடவை காதலனைக் கேட்டுள்ளாராம்.
ஆம் என்ற வாக்குறுதியுடன் நாட்கள் கடந்தோட மாதங்கள் புரண்டோட ஆண்டுகள் விடைபெற வாக்குறுதியோ காற்றில் பறந்தது.
பெண்னாக தனது உடல் சுகத்தை மட்டும் அனுபவிக்க அவள் தொடர்ந்தும் இடங்கொடுக்கவில்லை.
நீளத் திரைக்கதையின் நடுப்பகுதி சற்று கடினமான வார்த்தைகளின் பெண் போச இலக்கம் பிளக் செய்யப்படுகிறது பெண் வாட்சப்பில் அழைக்கிறாள் பதில் இல்லை குறுஞ்செய்தி அனுப்புகிறாள் நம்பர் முற்றுமுழுதாக பிளக் செய்யப்படுகிறது.
கண்ணகி தனது கணவனுக்காக நீதி கேட்டு பத்தினித் தெய்வமாக வழிபடுகின்ற நிலையில் உயிரிழந்த பெண் தனக்காக நீதி கேட்கச் செல்கிறாள் அவளின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகிறது.
இனித்தான் கதையின் இறுதிப்பகுதி காதல் என்னும் ஓடம் விட்டு காதலன் காதலியின் கையைப் பிடிக்கிறான் பிடித்த கைகள் இரட்டைப் பிடிக்க ஆயத்தமாக காதலி திருமணத்திற்கு கோரிக்கை விடுகிறாள்.
காமத்தில் சுற்றிய அரச வாகனத்தில் காலம் கனியும் என்ற நம்பிக்கையுடன் சுற்றியவளின் ஆசை நிராசையாகிறது.
எண்ணங்கள் சிதறடிக்கப்பட ஏக்கங்கள் கலைய விழி நீர் அரிவி சொரிய முடிவெடுக்க வேண்டும் என நினைத்த காதலி தனியாக காதலனான தவிசாளரின் செல்கிறாள்.
நடந்ததோ! விபரீதம் கதை எழுதியவனே திகைத்து நிக்க வேடிக்கை பார்க்க யாரும் இல்லாத இடத்தின் படத்தின் இறுதிக்காட்சிகள்.
காதலியின் மீது பெற்றோல் ஊற்றப்டப்படதா? அல்லது காதலி தனக்குத்தானே ஊற்றினாரா அல்லது காதலியை பிரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வில்லன் ஒருவன் குறித்த காரியத்தை செய்தாரா என அறிவதற்கு இறுதிவரை காத்திருங்கள் படத்தின் முடிவிற்காய்.....
யாழில் அமைக்கப்பட்ட கொரோனா இடை தங்கல் நிலையங்களில் காணாமல் போன பொருட்களை விசாரணைக் குழு தேடிப் பிடிப்பதற்கு முன்னரே சூட்சமமான முறையில் ஒரு வைத்திய சாலையில் இறக்கிய கில்லாடி வேறு யாரும் அல்ல வைத்தியக் கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரனையே சாரும்.
எல்லோரும் என்ன விஷயம் எப்படி நடந்தது இந்த விடையத்திற்கும் கலாநிதிக்கும் என்ன சம்பந்தம் என அறிவதற்கு ஆர்வமாக உள்ளீர்கள் என்பதால் நேரடியாக விடையத்துக்கே செல்வோம்.
வட மாகாணத்திலே குறிப்பாக இலங்கையில் வேறு எந்த மாகாணத்திலும் வைத்தியர் ஒருவர் வகிக்காக பதவியை முன்னாள் வட மாகாண சுகாதார பணிப்பாளர் கேதீஸ்வரன் வகித்துள்ளார்.
அரச சேவையில் 25 வருடங்களை எட்டுகின்ற நிலையில் எவ்வித இட மாற்றமும் இன்றி மாகாண சுகாதார பணிப்பாளர் மற்றும் யாழ் பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஆகிய இரு பதவிகளையும் அலங்கரித்த பெருமை இவரையே சாரும்.
இவ்வாறு பெருமைகளை உடைய வைத்தியர் கேதீஸ்வரன் ஓட்டு மாட்டு அடிப்பதிலும் இவருக்கு நிகர் வேறொருவர் இருக்க முடியாது.
ஒருவேளை இவரைப் பற்றி ஆதாரத்தை வெளியிட முடியுமா என சிலர் கேட்கக் கூடும் அல்லது நினைக்கக்கூடும்.
என்னடா 25 வருடங்கள் சேவையாற்றிய ஒருவரின் நிறைகளை சொல்லாமல் குறைகளை ஏன் சொல்கிறார்கள் என இன்னும் சிலர் எண்ணக்கூடும்.
அரச சேவையை பொறுத்தவரையில் எனது கடமையை சரியாக செய்தால் அது கடமையை செய்ததாக கருதப்படும் ஆனால் அதில் விடும் தவறுகள் அவரின் கடமை தொடர்பில் வியாக்கியானங்களை ஏற்படுத்தும்.
இந்த விடயம் கேதீஸ்வரன் எனக்கு மட்டுமல்ல அனைத்து துறைகளைச் சார்ந்தவர்களுக்கும் பொதுவாக பொருந்தக்கூடிய விடயம்.
அடுத்து இவர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அல்லது முறைகேடுகள் பல இருந்தாலும் சிலவற்றை நோக்குவோம்.
வட மாகாணத்தில் கொவிட் 19 ஆரம்ப காலப் பகுதியில் முன்களப் பணியாளர்களுக்கென வழங்கப்பட்ட தடுப்பூசியில் கூட்டு மோசடி
அதாவது தனியார் வைத்தியசாலைகள் ஆடம்பர விடுதிகளுக்கு ஊசிகளை விற்பனை செய்தமை இதிலிருந்து தப்புவதற்கு அப்போதைய வடக்கு மாகாண ஆளுநர் சாள்ஸ் பணிபுரையின் பெயரில் ஒரு பகுதி அவருக்கு வழங்கப்பட்டது.
கொரோனா இடைத்தங்கல் நிலையங்களில் பயன்படுத்தப்பட்ட பொருட்களை உறவினர்களுக்கும் அங்கு கடமையாற்றியி வைத்தியர்களின் உறவினர்களுக்கும் வழங்கியமை.
மந்திகை ஆதார வைத்தியசாலையின் கட்டட வேலைக்காக வெளிநாடுகளில் இருந்து வழங்கப்பட்ட பெருமளவு நிதியினை கையாள்வதற்கு சபை ஒன்று உருவாக்கி மோசடி செய்த பெருமையும் கேதீஸ்வரன் ஐயாவையே சாரும்.
மந்திகை ஆதார வைத்திய சாலைக்கு புலம்பெயர் உறவுகளால் வழங்கப்பட்ட பணத்துக்கு செலவுகள் மந்திகை வைத்தியசாலையின் கணக்குப் பிரிவுக்கோ அல்லது யாழ் பிராந்திய சுகாதார பணிமனையின் கணக்குப் பிரிவுகோ கணக்கு வழக்கு காட்டாமல் தாங்கள் நினைத்தபடி பங்கு போட்டமை.
அதில் நடந்த சுவாரசியம் என்னவெனில் அந்த நிர்வாகத்தில் இருந்த வைத்தியர் ஒருவர் கார் எடுக்க வேண்டும் கடனாக 50 இலட்சம் ரூபாய் தாருங்கள் என கேட்க அவருக்கு 50 இலட்சம் வழங்கப்பட்டதாம்.
இதை அறிந்த குறித்த நிர்வாகத்தில் இருந்த பெண் ஒருவர் தனக்கும் வீடு கட்ட ஒரு தொகை பணம் தேவைப்படுகிறது தாருங்கள் எனக் கேட்க அவருக்கும் 75 இலட்சம் வழங்கப்பட்டதாம்.
இது இரண்டும் வாயால் கேட்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட தொகை மற்றய தொகையைப் பற்றி நான் கூற வேண்டிய தேவை இல்லை.
அதைவிட இன்னொரு விடயம் வாரத்தில் இரு நாட்கள் கோழிக்கறி ஆட்டுக்கறையுடன் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு சாப்பாடு கணக்கு மந்திகை ஆதார வைத்தியசாலையின் ஊழியர் சங்கத்தின் பெயரில். இன்று வரை கட்டப்படாமலே இருக்கிறது.
அடுத்ததாக மாகாண அமைச்சு மத்திய அமைச்சினால் வழங்கப்படும் நிதிகளுக்கு கட்டடங்கள் கட்டுவதில் கேதீஸ்வரனுக்கு அடிப்பதோ பல இலட்சம்.
இவ்வளவு அடிக்கிற மனுசன் எவ்வாறு பல வருடங்களாக மாட்டுப் படாமல் இருக்கிறாரே எனத் தேடிப் பார்த்தால் பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பின் கதையாக முடிந்தது.
வட மாகாண உள்ளக கணக்காய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்த பொன்மணியே இவரை பாதுகாத்து வந்துள்ளார்.
ஏன் பாதுகாத்தார் இவரை பாதுகாப்பதால் அவருக்கு என்ன இலாபம் என நீங்கள் கேட்க கூடும்.
அங்கே தான் பரமசிவனும் கழுத்தில் இருந்த
பாம்பின் கதையும் உண்மையாகி விடுகிறது.
வடமாகாண உள்ளக கணக்காய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்த பெண்மணியின் கணவர் யாழ் பல்கலைக்கழகத்தின் ஒரு விரிவுரையாளராக இருந்து கொண்டு தனது முழு நேர தொழிலாக கேதீஸ்வரன் ஐயாவுடன் இணைந்து சுகாதார அமைச்சுக்களில் இடம்பெறுகின்ற பெரும்பாலான கட்டட ஒப்பந்தங்கள் இவருக்கே வழங்கப்பட்டதாம்.
மனைவி கணக்காய்வு கணவன் ஒப்பந்த நிறுவனம் இருவரும் இரவு பகலாக மக்களின் வரிப்பணத்தை சுரண்டி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் மாட மாளிகை ஒன்றையும் கட்டியுள்ளார்கள்.
இவர்களின் உதவி ஒத்தாசையும் கேதீஸ்வரன் போன்ற அதிகாரிகளை ஓய்வில்லாமல் சுரண்ட வைத்தது.
இதில் அடுத்த சுவாரசியம் என்னவென்றால் இந்த மாகாண கணக்காய்வு திணைக்களத்தின் பெண் உயர் அதிகாரி முறைப்பாடுகள் யாராவது வழங்கினால் அதுவும் சுகாதாரத் திணைக்களம் சம்பந்தமான முறைப்பாடுகளை வழங்கினால்.
விசாரணைக்கு ஏதுவாக முதலிலே ஐயா கேதீஸ்வரன் உடன் கலந்துரையாடி எவ்வாறான விடயங்களை தட்டைக் கழிப்பது எவ்வாறு விடயங்களை விசாரணைக்கே எடுத்துக்கொள்ளாமல் விடுவது தொடர்பில் தொலைபேசி உரையாடல் இடம் பெறுமாம்.
இவ்வாறான நிலையில் குறித்த பெண்மணியை வடமாகாண ஆளுநர் துரத்திய நிலையில் ஐயாவின் விளையாட்டுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆளுநர் செயலகத்துக்கு தெரியப்படுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மந்திகை விவகாரம் வெளிச்சத்திற்கு வர பதில் பொறுப்பு வைத்திய அதிகாரியாக இருந்தவர் இடமாற்றப்பட்டார்.
தற்போது கொரோனா இடை தங்கல் நிலைய மோசடி விவகாரம் விசாரணைகள் ஆரம்பித்துள்ள நிலையில் காணாமல் போன பல இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் வானத்திலிருந்து கீழே குதித்து விட்டது.
கண்ணாம்பூச்சி ரே ரே கண்டுபிடி யாரே இந்த விளையாட்டு கேதீஸ்வரன் ஐயாவுக்கு கைவந்த கலை விசாரணை குழு யார் அந்த கள்வன் எனத் தேடிப்பிடிப்பதற்கு முன்னால் விசாரணை குழுவின் கண்ணில் மண்ணை தூவி பொருட்கள் வந்து இறங்கி விட்டது.
என்னதான் இருந்தாலும் அனுபவம் கேதீஸ்வரன் ஐயாவுக்குள் புகுந்து விளையாடுகிறது நான் கலாநிதி விசாரணைக்கு வந்தவர்களோ வெறும் SLAS க்கள் புகுந்த விளையாடுகிறார் கலாநிதி.
பார்ப்போம் கலாநிதியின் கண்ணாம்பூச்சி விளையாட்டில் விசாரணை குழு அதிகாரிகள் இடம் தெரியாமல் ஓடி விடுவார்களா அல்லது கலாநிதி முகத்திரை கிழியுமா? எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.
யாழ்.நாவலர் மண்டபத்தில் இருந்து யாழ்.மாநகரசபை விலகுமாறு வடமாகாண ஆளுநர் வழங்கிய பணிபுரையை எதிர்த்து மாநகரசபை உறுப்பினர் வரதராஜா பார்த்திபனால் யாழ்.மேல் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
பார்த்தீபன் சார்பில் முன்னாள் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆஜகராகிய நிலையில் மன்றினால் இடைக்கால தடை உத்தரவும் வழங்கப்பட்டது.
தடை உத்தரவு வழங்கப்பட்டாச்சு கொஞ்ச காலம் ஓடித்தான் பார்க்கலாம் என்று நினைப்பதற்கு முன்னர் இந்து கலாச்சார திணைக்களம் "ரிட்" மனுவை விரைவில் தாக்கல் செய்வதற்கான பூர்வாங்க வேலைகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
ரிட் மனு
"WRITTEN ORDER" என்பதைத்தான் ரிட் மனு என்று சொல்கிறோம்.
அதாவது அரசாங்கத்திடம் எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்க சொல்லி நாம் தாக்கல் செய்யும் மனுவிற்கு பெயர்தான் ”ரிட்” மனு.
அரசாங்கம் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு எதிராகவோ அல்லது அரசாங்கல் தலையிட்டு நடத்த வேண்டிய காரியங்களுக்கு “ரிட்” மனு தாக்கல் செய்யலாம்.
துறை சார்ந்த அதிகாரியிடம் மனு கொடுத்தும், அவர்கள் அது சம்பந்தமாக ஏதும், நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அந்தத்துறை அதிகாரிக்கு, அதனை சரி செய்யச்சொல்லி உத்தரவு போட அரசாங்கத்தைக் கேட்கலாம்.
வரையறுக்கப்பட்ட கடமையை ஒரு அரசு அதிகாரி செய்யாவிட்டாலோ, அரசாங்கம் அல்லது அரசு சார்ந்த நிறுவனம் சட்டவிரோதமான உத்தரவை பிறப்பிக்கப் போகிறது என்று தெரிந்தாலோ அந்தக் காரியத்தை செய்யாமல் தடுக்க "ரிட் "மனுவை தாக்கல் செய்யலாம்.
யாழ் நாவரர் மண்டபத்தை பொறுத்தவரையில் அது இந்த கலாச்சார அலுவலர்கள் திணைக்களத்துக்கு சொந்தமானது என யாழ் மாநகர முன்னாள் ஆணையாளரும் வடக்கு மாகாண அவை தலைவருமான சி வி கே சிவஞானம் கடந்த வருடம் பகிரங்கமாகவே கூறி இருந்தார்.
அது மட்டுமல்லாது 1985 ஆம் ஆண்டு இந்து கலாச்சார அலுவலகத்தில் நாவலர் மண்டபத்தை ஒப்படைக்குமாறு எழுத்து மூலமாக கடிதத்தையும் வழங்கி உள்ளது.
அக் அடிதத்தில் ஒரு விடயத்தை மேற்கோள்காட்டிய இந்து கலாச்சார திணைக்களம் நாம் கோரிக்கை விடுத்து இரண்டு வாரங்களுக்குள் மண்டபத்தை தமக்கு ஒப்படைக்க வேண்டும் என்று நிபந்தனை இருப்பதாகவும் சுட்டிக்காட்டியது.
இவ்வாறு நிலையில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த கணபதிப்பிள்ளை மகேசன் காலத்தில் மத்திய அரசாங்கத்தின் கோரிக்கைக்கு ஏற்ற வகையில் மாவட்டத்தில் இருந்த அனைத்து ஆதாரங்களும் வழங்கப்பட்டு விட்டது.
யாழ் நாவலர் மண்டபத்தின் காணிகள் அனைத்தும் உரிய முறையில் மாவட்ட செயலகத்தினால் அடையாளப்படுத்தப்பட்டு கலாச்சார திணைக்களதிற்கு யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி ) முரளிதரன் உரிய முறையில் உறுதிப்படுத்தப்பட்டு வரைபடமும் கலாச்சார திணை களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டமை பலருக்கும் தெரியாது இருக்கலாம்.
தற்போது யாழ்.மாநகர முன்னாள் உறுப்பினர் வரதராஜா பார்த்திபன் ஆளுநரால் நாவலர் மணிமண்டபத்தை வழங்கும் தீர்மானத்திற்கு எதிராக யாழ்.மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை இடைக்கால உத்தரவு மன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்று சொல்வார்கள்.
யாழ் மாநகர ஆணையாளர் ஜெசீலன் நாவலர் மணிமண்டபத்தை உரிய முறையில் பராமரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு வலுவாக உள்ளது.
அரசியல் கட்சி கூட்டாக அனுமதி வழங்கியமை நாவலர் படத்தை ஒரு மூலையில் போட்டமை, ஆளுநரின் கடிதத்தை பகிரங்கப்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலும் மாகாணத்தில் இருந்து மத்திக்கு விடுவிக்கக்கூடிய சூழ்நிலைகள் அதிகமாக தென்படுகிறது.
இறுதியாக வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கலாச்சார திணைக்களம் பணிப்பாளருக்கு எழுதிய கடிதத்தில் நாவலர் மண்டபத்தில் அமைந்துள்ள நூலகத்தை மாநகர சபை பயன்படுத்துவதற்கு இருவரும் புரிந்துணர்வு அடிப்படையில் அதனை செயல்படுத்துமாறு ஒரு விடயத்தை குறிப்பிட்டருந்தார்.
"ரிட்" மனு தொடர்பில் மேலே விளக்கம் தரப்பட்ட நிலையில் தற்போது வழக்கு போட்டாச்சு இடைக்கால உத்தரவு வழங்கப்பட்டுள்ளது இவ்வாறான நிலையில் இந்து கலாச்சார திணைக்களம் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்துடன் ஆலோசனை நடாத்தி வருகிறது.
ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டால் நீதிமன்றம் வழக்கை தவணை போட்டு இழுத்தடிக்க முடியாத நிலையில் நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
ஆனால் வழக்கு தீர்ப்பு ஒரு வேளை கலாச்சார திணைக்களத்துக்கு சார்பாக கிடைத்தால் மாநகர சபை முற்று முழுதாக நாவலர் மண்டபத்தில் இருந்து விலக்கப்படும் அதையே சும்மா இருந்தா சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என மேலே குறிப்பிட்டேன்.
யாழ் மாநகர ஆணையாளருக்கு தற்போது திடசங்கு நிலை ஏற்பட்டுள்ளது "ரிட்" மனு தாக்கல் செய்யப்பட்டால் யாழ் நாவலர் மண்டபம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மன்றத்துக்கு தெரிவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
அல்லது உள்ளூர் ஆட்சி அமைச்சர் என்ற நீதியில் ஆளுநரின் செயலாளரோ அல்லது அமைச்சின் செயலாளரே அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மன்றுக்கு கூற வேண்டும்
அதை மட்டும் அல்லாது நாவலர் மண்டபத்தின் உறுதி யாழ் மாநகர சபையின் பெயரிலா அல்லது கலாச்சாரத் திணைக்களத்தின் பெயரிலான இருக்கிறது என்ற சர்ச்சையும் வெளிப்படுத்தப்படும்
எல்லாவற்றையும் தொகுத்துப் பார்த்தால் தீர்ப்பு யார் பக்கம் செல்லப் போகிறது என்பதற்கு அப்பால் பல வருடங்களாக நீடித்து வந்த நாவலர் மண்டபச் சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வந்தவர் என்ற வரலாற்றுப் பதிவினை யாழ் மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வரதராஜா பார்த்தீபனுக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை முற்று முழுதாக ஏற்பட்டுள்ளது.