SuperTopAds

ஒற்றன்..!

June 2022

யாழில் இந்திய மண்ணெண்ணெய் பரல்களில் உருட்டு  விட்ட பிரதேச செயலாளர்கள்..

இந்திய அரசினால் யாழ்மாவட்ட மீனவர்களுக்கு வழங்கப்பட்ட 15,000 லீட்டர் மண்ணெண்ணெய் கடல் கடந்த தீவகப் பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டமை யாவரும் அறிந்ததே.

இந்திய அரசினால் யாழ் மாவட்ட கடற்தொழிலாளர்களுக்கு வழங்கி மண்ணெண்ணெய் போதுமா? போதாதா ? என்ற கேள்விகள் ஒருபுறம் இருக்க பதினையாயிரம் லீட்டர் மண்ணெண்ணெய் அடைத்து வரப்பட்ட சுமார் 75 பரல்களை பிரதேச செயலாளர்கள் ஆட்டைய போட்டமை பனையில் இருந்து விழுந்தவனை மாடேறி மிதித்தது போல் நடந்துள்ளது.

இந்திய அரசாங்கம் யாழ் மாவட்ட மீனவர்களுக்கு மண்ணெய் வழங்கிய பின்னர் வெற்று பரல்களை யாழ் இந்தியத் துணைத் தூதரகத்துககு தெரியாமலே ஒவ்வொரு பிரதேச செயலாளர்களும் "ஓடு மீன் ஓட உறுமீன் வரும்வரை காத்திருந்தாம் கொக்கு" அது போல மண்ணெண்ணெய் விநியோகம் முடியும் வரை காத்திருந்து வெற்றுப் பரல்களை எடுத்துச் சென்றுவிட்டார்கள்.

நெடுந்தீவு பிரதேச செயலாளர் 35 பரல்கள், ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் 22 பரல்களையும், வேலணை பிரதேச செயலாளர் வேலணை பிரதேச செயலாளர் 21 பரல்களையும் பிரதேச செயலகம் கொண்டு சென்று விட்டனர்.

அதில் 4 பரங்களை யாழ் இந்திய துணைத் தூதரகத்திற்கும் 1 பரலை மீனவ சங்கத்துக்கும் ஒப்படைத்ததாக அறியக்கிடைக்கிறது.

இலங்கை அரசாங்கம் வழங்கிய எண்ணெயாக இருந்தால் ஏற்றுக்கள்ளலாம் அரச நிறுவனங்கள் அதனை பொறுப்பேற்பதற்கு அதிகாரம் இருக்கிறது.

ஆனால் இந்தியா யாழ் மாவட்ட மீனவர்களுக்கு வழங்கிய உதவி திட்டத்தை மீனவர்களுக்கு முழுமையாக சென்றடையாமல் பரல்களை ஏன் பிரதேச செயலாளர்கள் தாம் எடுத்துக் கொண்டார்கள் என்ற சந்தேகம் பரவலாக எழுகிறது.

தற்போது சந்தையில் ஒரு பரலின் விலை 5000 ரூபாவாக் காணப்படுகின்ற நிலையில் அதனை விற்பனை செய்து மீனவ சங்கங்களுக்கு பணத்தை பகிர்ந்தளித்து இருக்கலாம் அல்லது மீனவ சங்கங்களின் தேவைக்காக அதனை அவர்களிடமே பிரித்து ஒப்படைத்திருக்கலாம்.

குறித்த விடயம் தொடர்பில் கேள்வியுற்ற இந்திய தூதரகத்திற்கு சிறிது தடுமாற்றம் ஏற்பட்ட நிலையில் குறித்த பரல்களை பொறுப்பேற்குமாறு பிரதேச செயலாளர்களுக்கு யார் உத்தரவு வழங்கியது அல்லது பிரதேச செயலாளர்கள் தாங்களாக முடிவுகளை எடுத்தார்களா என தூதரகம் துப்பறிந்து வருகிறது.