SuperTopAds

ஒற்றன்..!

September 2023

மத்தியா? மகளா? டக்ளஸ்சை  எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

வடக்கு ஆளுநர் பி எச் எம் சாள்ஸ் அவர்களை வடக்கு ஆளுநராக கொண்டு வந்ததில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கு அளப்பெரியது இதை யாரும் மறுப்பதற்கில்லை.

ஆளுநர் சாள்ஸ் எப்படிப் பதவிக்கு வந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் அதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணா நாயக்கவின் பங்கும் உள்ளதாக கூறப்படுகிறது.

சுங்கத் திணை களத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக சாள்ஸ் இருந்தபோது நிதி அமைச்சராக ரவி இருந்தார் தற்போதைய ஆளுநர் செயலாளரான நந்தகோபன் பணிப்பாளராக இருந்தார்.

இந்த இணைப்புக்களை சரியாக இணைந்ததால் தான் நேர்மையான அதிகாரியான வாகிசனை நீக்கிவிட்டு நந்தகோபனை அருகில் கொண்டு வந்தார் சாள்ஸ் .

வடக்கு ஆளுநர் தொடர்பில் பல்வேறு முறைப் பாடுகள் ஜனாதிபதி செயலகம் வரை சென்ற நிலையில் ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதானி சாலகவும் சாள்சை மாற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே உள்ளாராம்.

ஆளுநரை மாற்ற வேண்டாம் என செல்வம் அடைக்கலநாதனும் சாள் நிர்மலா நாதனும் ஜனாதிபதியின் நெருங்கிய சகாக்களுக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்துள்ள நிலையில் விக்னேஸ்வரன் ஒரு படி மேலே சென்று ஜனாதிபதியிடம் நேரடியாகவே மாற்றுங்கள் எனக் கூறிவிட்டாராம்.

இவரை மாற்ற வேண்டாம் என கூறுபவர்கள் தொடர்பில் ஏன் என்பதற்கு எல்லாமே ஊழல் தான் என ஒரு சொல்லில் ரணிலிடம் பதிலளித்தாராம் விக்கி.

சரி இது ஒரு புறம் நடக்க அமைச்சர் டக்ளஸ்சை எதிர்ப்பதற்கு காரணமான மகள் பாசம் தான் என்ன? விரிவாகப் பார்ப்போம்...

பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது என கூறும் டக்ளஸ் தேவானந்தாவை ஆளுநர் சாள்ஸ் சங்கடத்துக்கு உள்ளாக்கியுள்ளாராம்!

இதில் என்ன மத்தியா? மகளா? என என்ன என அறியா ஆவலாக இருக்கும் இறுதிவரை வாசியுங்கள் மத்திக்கும் ஆளுநருடைய மகளுக்கும் என்ன தொடர்பு எனக் கூறுகிறோம்.

சரி விடையத்திற்கு வருவோம் தற்போது கூட ஆயுதப் போராட்டத்திலும் அரசியல் போராட்டத்திலும் சமதளத்தில் பயணிக்கக் கூடிய ஆளுமை டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக ஆளுநர் மேற்கொண்ட செயல்பாடு யானையின் காதில் தேனீ புகுந்தால் யானை எவ்வளவு சங்கடப்படும் என்பதை கதைகள் மூலம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஆனால் தற்போது நடக்கும் செயற்பாடு கதை அல்ல நியமாகவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு குடைச்சல் கொடுக்கும் செயற்பாட்டை ஆளுநர் மேற்கொண்டுள்ளார்.

வடமாகாண சுகாதார பணிப்பாளராக நிரந்தரமாக எவரும் நியமிக்கப்படாத நிலையில் பதில் பணிப்பாளராக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சங்கமுத்து சத்தியமூர்த்தி கடமையாற்றி வருகிறார்.

வட மாகாண சுகாதாரப் பணிப்பாளர் ஒருவரை நிரந்தரமாக போடும் முயற்சியில் மன்னார் மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றும் வைத்திய கலாநிதி வினோதனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிப்பதற்கு மத்திய சுகாதார அமைச்சருடனும் செயலாளருடனும் கலந்துரையாடி அவரை நியமிப்பதற்கான வேலைப்பாடுகள் இடம்பெற்றன.

மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரான சந்திரகுப்தா மாகாண சுகாதார பணிப்பாளரை நியமிப்பதற்கு ஆளுநருடைய சிபாரிசு வேண்டுமென கூறியதன் அடிப்படையில் வடமாகாண ஆளுநர் எழுத்து மூலம் மத்திய சுகாதார அமைச்சுக்கு சிபாரிசினை அனுப்பியதாக அறிய கிடைக்கிறது.

மறுநாள் வேதாளம் முருக்க மரத்திலிருத்தில் ஏறியது போல சுகாதார அமைச்சின் செயலாளருக்கு தொலைபேசி மூலம் ஆளுநர் சார்ஸ் தொடர்பு கொண்டு வைத்தியசாலையில் கிளிநொச்சி மற்றும் வவுனியா சம்பவம் தொடர்பில் விசாரணை இடம்பெறுவதாகவும் சத்தியமூர்த்தியை வடமாகாண சுகாதார பணிப்பாளர் பதவியில் இருந்து மாற்ற வேண்டாம் என கூறினாராம்.

இந்தத் தகவலை ஆளுநரின் அருகில் இருந்த ஒருவர் "படாச்" என்று அமைச்சர் டக்ளஸ் காதுக்கு போட்டுள்ளார்.

ஏன் அவ்வாறு சத்தியமூர்த்தியை காப்பாற்றுகிறார் என அமைச்சரின் சகாக்கள் தேடி பார்த்த போது ஆளுநரின் மகள் ரஷ்யாவில் மருத்துவ படிப்பை முடித்துக் கொண்டு யாழ் போதனா வைத்திய சாலையில் பயிற்சிக்காக சென்றுள்ளார் என்ற சம்பவம் தெரியவந்தது.

சரி பயிற்சி தானே சத்தியமூர்த்தி போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ஏன் ஆளுநர் மாற்ற வேண்டாம் என திடீரென கூறினார் என சில தரப்புகள் ஆராய்ந்தன.

அப்போதுதான் ஜீபூம்பா பூதம் சத்தியமூர்த்தியிடம் மாட்டிய கதை வெளியில் வந்தது .

ஆளுநர் செயலகத்துக்கு வழங்கப்பட்ட அரச வாகனத்தில் பயிற்சிக்காக ஆளுநருடைய மகள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு சென்று வருவது அம்பலமானது.

மருத்துவ பயிற்சிக்காக மூன்றாம் இலக்க விடுதியில் இணைத்துக் கொள்ளப்பட்ட மகள் கொடுக்கப்படும் வேலைகளை உரிய வகையில் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு பொறுப்பு வைத்தியர் ஊடாக விடுதி வைத்தியருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.

விடுதி வைத்தியர் சரிவராது இவரை வேறு ஒரு விடுதிக்கு அனுப்புங்கள் என எச்சரிக்கையுடன் கூற ஒரு வைத்தியர் "சேர்" இது ஆளுநரு டைய மகள் என கூற உடனடியாக மாற்றி விடுங்கள் என கடந்தொனியில் கூறிவிட்டு சென்றாராம் வைத்திய நிபுணர்.

வேறு வழியில்லை என விடுதி வைத்தியர்கள் கூற மகள் தாயிடம் நடந்தவற்றைக் கூற மத்தியின் பணிப்பாளர் சத்தியமூர்த்தியிடம் எனது மகளின் பிரச்சனையை சரி செய்யுங்கள் என தொலைபேசியில் ஒரு குரல் நலிந்து ஒலித்தது.

பணிப்பாளரின் அறிவுறுத்தலின் பிரகாரம் 9 இலக்க விடுதிக்கு மாற்றப்படுகிறாள் மகள்.

இந்த நன்றிக்கு பிரதி உபகாரமாக பணிப்பாளர் சத்தியமூர்த்தி ஆளுநருக்கு தொலைபேசி ஊடாக நான் மாகாண சுகாதார பணிப்பாளர் பதவியில் இருந்து விலகத்தான் போகிறேன் ஆனால் தற்போது விசாரணைகள் இடம் பெற்றுக் கொண்டிருப்பதை காரணம் காட்டி தை மாதம் வரை பிட் போடுங்கள் என கூறினாராம்.

வேறு வழியில்லை கடமைப்பட்டு விட்டோம் வாழ்நாள் பூராக யாழ் போதனை வைத்தியசாலை பணிப்பாளராக சத்தியமூர்த்தி தான் இருக்கப் போகிறார் எனது மகளும் இங்கே தான் வைத்தியராக இருக்கப் போகிறார் என நினைத்து மகளைக் காப்பாற்ற வேண்டுமென களத்தில் இறங்கி விட்டார்.

இது அத்தனையும் அமைச்சர் டக்ளஸ் காதுகளுக்கு சென்ற நிலையில் ஆளுநரிடம் ஒன்றும் பேசாது தொலைபேசி மூலம் சுகாதார அமைச்சின் செயலாளர் சந்திர குத்தாவிடம் நடந்தவற்றை கேட்டாராம் டக்ளஸ் .

அவரும் நடந்த சம்பவத்தை ஆக்கு வேறு ஆணிவேறாக அமைச்சரிடம் கூற ஆளுநரை தூக்க வேண்டும் என டக்ளஸ் முடிவெடுத்து விட்டாராம்.

ஆளுநர் பார்க்கும் படலம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் முதலாவது தொலைபேசி பெண் ஒருவருக்கு சென்றது அவர் தனது நோய் நிலைமையை காரணம் காட்டி மறுத்து விட்டார்.

இந்த விடயம் தற்போதைய ஆளுநர் சாள்சின் காதுகளுக்கு சென்ற நிலையில் நேரடியாக அமைச்சர் டக்ளஸ்சுடன் எப்படி பேசுவது என தயங்கிய சாள்ஸ் நடந்த சம்பவங்களை கூறி ஒருவரை தூது அனுப்பியுள்ளாராம்.

ஆனால் டக்ளஸ் தேவானந்தாவை பொறுத்தவரை எதிரிக்கு உயிர்ப்பிச்சை கொடுத்த வரலாறுகள் உள்ள நிலையில் துரோகிக்கு உயிர் பிச்சை கொடுக்க மாட்டார் என்பதும் தூது அனுப்பியவருக்கு நன்கு தெரியும்.

ரணில் விக்கிரமசிங்க நாடு வந்தடைந்ததும் அமைச்சரவை மாற்றத்துடன் வடக்கு ஆளுநர் மாற்றத்தையும் செய்தே ஆக வேண்டும் என்ற வைராக்கியத்துடன் காத்திருக்கிறார் டக்ளஸ்..செய்வதறியாது நிக்கிறார் சாள்ஸ்.