April 2022
வடக்கு சுகாதாரத் துறையை இரு வைரஸ்கள் முற்றாக அழித்து விட வேண்டும் என்ற நோக்குடன் செயல்பட்டு வருகின்றது
ஒரு வைரஸ் 15 வருடங்களுக்கு மேலாக யாழ் பிராந்திய சுகாதார பணிமனை மற்றும் வடமாகாண சுகாதார பணிமனை ஆகியவற்றில் மாறி மாறி தனது செயற்பாட்டை அவ்வப்போது காட்டி வருகிறது.
இந்த வைரஸ் தனக்கு எதிரியான கொரோனா வைரசை அழிப்பதற்கு கொழும்பில் இருந்து வழங்கப்பட்ட தடுப்பூசிகளை தமது சுற்றத்தாருக்கும் அயல் வீட்டுக் காரர்களுக்கும் விலைக்கி விற்றுவிட்டது.
இந்த வைரஸை பற்றி பலர் அறிந்திருப்பார்கள் ரஷ்யாவில் உற்பத்தியாகி வட மாகாணத்துக்கு கொண்டுவரப்பட்ட வைரஸ்.
மற்றைய வைரஸ் இலங்கையில் உற்பத்தியாகி வடமாகாணத்தில் தொற்று நோய்யல் பிரிவுக்குப் எ பொறுப்பாக இருக்கின்ற வைரஸ்.
இரு வைரஸ்களும் ஒன்றாக இணைந்து வடக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகள் கொரோனா நிலையங்கள் என எல்லாவற்றையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தன.
யாழ் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட குரானா இடைத்தங்கல் முகாம்கள் ஆன மருதங்கேணி வட்டுக்கோட்டை நாவற்குழி ஆகியவற்றில் பல மில்லியன் ரூபாய்களை ஏப்பம் விட்டமை பிரதமர் அலுவலகம் வரை சென்று விட்டது.
தொற்றுநோய்கள் பிரிவுக்கு பொறுப்பாக இருக்கும் வைரசுக்கு இரு வீடுகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு வைரஸ்களும் ஒன்றையொன்று தனித்து இயங்காது அடிக்கும் போதும் இரு வைரஸ்களும் இணைந்தே அடித்துக்கொள்ளும்.
இந்நிலையில் ஒரு வைரசுக்கு வருடாந்த இடமாற்றம் முல்லைத்தீவுக்கு கிடைத்தும் அதனுடன் சேர்ந்த வைரஸ் கொழும்பில் உள்ள மிகப் பெரிய வைரசுடன் கதைத்து நிறுத்திவிட்டது.
அந்த வைரஸ் ஏன் அப்படி செய்தது என ஆராய்ந்து பார்த்தால் நாங்கள் இருவரும் அடித்த கொள்ளைகளை நேர்மையான ஒரு வைரஸ் அந்த இடத்தில் செயற்பட ஆரம்பித்தால் வெட்ட வெளிச்சம் ஆகிவிடும் என ரஷ்ய வைரஸ் பயந்துவிட்டது.
இந்த இரண்டு வைரஸ் கலக்கம் எதிர்ப்பு வைரசை செலுத்துவதற்கு இருவர் தயாராகிவிட்ட நிலையில் எவ்வளவு தூரத்திற்கு இரண்டு வைரஸ்களும் எந்தளவு தூரம் தாக்குப் பிடிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...
...தொடரும்...