August 2019
என் அன்பான பள்ளி ஆசிரியர்களே உங்கள் காதுகளைக் கொஞ்சம் இந்தப்பக்கம் சாயுங்கள்..
ஒவ்வொரு பெற்றோருக்கும் தம் பிள்ளைகள்தான் உலகம் ஏன் உங்களுக்கும் கூட அப்படித்தான் தன் பிள்ளை எதிர்காலத்தில் நல்லபடி வாழவேண்டும் என்ற கனவை சுமந்தே கடன்பட்டு கூலிவேலை செய்து படாதபாடுபட்டு பள்ளிக்கு அனுப்புகிறார்கள் அப்படி அனுப்பியபின்னும் பள்ளிசென்ற பிள்ளை நல்லபடி வீடுதிரும்பிவரும்வரை தாயவள் நெஞ்சில் ஆயிரம் தவிப்புக்கள் அலைமோதும் அத்தனைக்கும் அவளுக்கு ஒரேயொரு ஆறுதல் ஆசிரியர்கள் நீங்கள் மட்டுந்தான் உங்கள் முகமே தெரியாதபோதும் தன்பிள்ளையை நல்லபடி பார்த்துக்கொள்வீர்கள் நல்லதையே சொல்லிக்கொடுப்பீர்கள் என்ற அவளின் அதீத நம்பிக்கை மட்டும்தான் அவளின் ஆறுதல்
ஒருநாளில் 8,9மணித்தியாலங்கள் கூடுதலான நேரம் பிள்ளைகள் உங்களோடு மட்டும்தானே இருக்கிறார்கள் நீங்கள் கற்பிக்காத விடயங்களைக் கூட உங்களைப்பார்த்துத்தானே கற்கிறார்கள் அப்படி இருக்கையில் அவர்களுக்கு ஏதும் நிகழ்ந்தால் நீங்கள்தானே பொறுப்பு ஆனால் நீங்களோ வாங்கும் பணத்திற்காக மட்டுமே பணிசெய்கிறீர்கள்
ஒரு பிள்ளை மயங்கி விழுந்தால் அதை உடனே வைத்தியசாலைக்கு தூக்கிச்செலவதுதானே மனிதம் ஆனால் நீங்கள் மட்டும் அவர் தாய்தந்தைக்கு அறிவித்து அவர்கள் வந்து தூக்கிச்செல்லும்வரை அந்த உயிர் துடிதுடிப்பதை பார்த்து ரசித்திருக்கிறீர்கள் நீங்கள் உண்மையில் படித்தவர்கள்தானா ஒருவேளை சோறுவைத்தாலே நன்றியோடு மறக்காமல் வாலையாட்டும் நாய் ஆனால் ஏழு ஆண்டுகள் உங்கள் முகத்தையே பார்த்து வளர்ந்தவள் உயிர்போகும் தருவாயிலும் உங்கள் முகத்தைத்தானே பார்த்திருப்பாள் நீங்கள் எப்படியும் தன்னை காப்பாற்றிவிடுவீர்கள் என்றுதானே நினைத்திருப்பாள் அவள் வலியில் துடிக்கும்போதுகூட நீங்கள் இரங்கவில்லையே உங்கள் பிள்ளையென்றால் வேடிக்கை பார்த்திருப்பீர்களா ஆபத்திற்கு உதவாத உங்களிடம் பிள்ளைகள் எதை கற்று கிழிக்கப்போகிறார்கள்
இன்று உங்கள் அலட்சியத்தால் ஒரு உயிர் பிரிந்திருக்கிறது அந்த உயிரை உங்களால் திருப்பித்தர முடியுமா இல்லை அந்த சிறுமியின் பிரிவால் துடிக்கும் தாய்தந்தை வலியை உங்களால் தீர்க்கமுடியுமா அன்பான ஆசான்களே அன்பு பண்பு பாசம் இரக்கம் கருணை இவைகள் இருந்தால் மட்டும் கற்றுக்கொடுக்க வாருங்கள் இல்லையேல் முதலில் அதை கற்றுவிட்டு வாருங்கள் இனியும் ஒரு உயிர் மனிதம் மறந்த மனிதர்களால் பிரியவேண்டாம் பிள்ளையை பறிகொடுத்த பெற்றோர்களே உள்கள் பிள்ளையின் உயிரைப்பறித்த பள்ளியின்மீது வழக்குத்தொடருஙரகள் எதிர்காலத்தில் இதுபோன்ற கொடுமைகள் நிகழாதிருக்கட்டும்
ஆலடிமருது