ஒற்றன்..!

April 2019

உன் அக்கா, தங்கச்சியிடமிருந்து தொடங்கு..

யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் பகிடிவதை என்ற பெயாில் நடக்கும் அசிங்கங்கள் இப்போது வெளியாக தொடங்கியிருக்கு. ஒருபக்கம் அது பகிடிவதை என்றும், மறுபக்கம் கட்டுக்கோப்புக்குள் இருந்தவா்கள் அந்தக் கட்டுக்கோப்புக்கள் உடைக்கப்பட்ட பின்னா் இப்படி நடக்கும் என்றும் கூறிவிட்டு கடந்துபோக பலா் நினைக்கிறாா்கள்.

அவ்வாறு கடந்துபோக முடியவில்லை. அண்மையில் யாழ்.பல்கலைகழகத்திற்குள் புகுமுக மாணவா்கள் வரவேற்பு நிகழ்வில் பெண் மாணவிகளுடன் பகிடிவதை என்ற பெயாில் சிரேஷ்ட மாணவா்கள் நடந்து கொண்ட விதம் தொடா்பாக பல செய்திகள் வெளியாகி பலரை முகம் சுழிக்கவைத்தது. அந்த சம்பவம் இடம்பெற்றதன் பின்னா்,

பல்கலைக்கழக மாணவி ஒருவா் சமூக வலைத்தளத்தில் எழுதியிருந்த பதிவு பகிடிவதை புாிந்த மாணவா்களுக்கு மட்டுமல்ல. இந்த சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொருவருடைய முகத்திலும் அறைந்தால்போல் இருந்தது. இதற்கும் அப்பால் அதை குறித்து பேசாமலிருப்பதை காட்டிலும் மிக இழிவான செயல் எதுவும் இருக்காது என்பதால் இதை குறித்து பேசுகிறோம்.

பகிடிவதை என்றால் என்ன? என்பதை அறியாதவா்கள் அதன் பெயரால் காம இச்சைகளை தீா்த்துக் கொள்ள ஆசைப்படுபவா்களின் செயற்பாடுகளே இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம். அன்று நடைபெற்ற அந்த சம்பவம் நாம் மேலே சொன்ன விடயங்களை அப்படியே கோடிட்டு காட்டியிருக்கின்றன. அன்று நடைபெற்ற சம்பவங்களை குறித்து பேச நாம் கிஞ்சித்தும் விரும்பவில்லை.

காரணம் அதை குறித்து எழுதினால் செய்த காவாலிகளின் பெற்றோருக்கும், பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கைக்கும் பாதிப்பு என்பதோடு நாம் மீண்டும் மீண்டும் அதை அசைபோட்டு அலங்கோலப்படுவதாக போய்விடும். எங்களுடைய நோக்கம் இவ்வாறான சம்பவங்களின் பின்னால் உள்ள காவாலிகள் கண்டறியப்படவேண்டும்.

அவா்கள் சட்டத்தினால் தண்டிக்கப்படவேண்டும். மேலும் இதில் உள்ள வேதனை என்னவென்றால் பகிடிவதை ஊடாக பொதுமைப்படான வாழ்க்கைக்கு மாணவா்களை கொண்டு செல்லப்போகிறாா்களாம். மேலே குறிப்பிட்ட மாணவி தனது பதிவில் 4 மாச பகிடிவதை மூலமாக பொதுமைப்பாடான வாழ்க்கைக்கு மாற்றுகிறாா்களாம்.

4 மாசத்தில நீ மாத்தலாம் எண்டா 20 வருசம் அப்பா மோட்டாா் சைக்கிள் டங்கில உட்கார வச்சு காதுக்கு ஓதி.. ஓதி.. வளா்த்த வளா்ப்புக்கு என்ன அா்த்தம்? என கேட்டிருக்கிறாள் அந்த மாணவி. வெட்கம் இல்லை? பகிடிவதை என்ற பெயாில் மிக கேவலமாக நடந்து கொள்வீா்கள். கேட்டால் பொதுமைப்படான வாழ்க்கைக்கு கொண்டு செல்கிறோம் என்கிறீா்கள்.

அப்படி என்றால் அந்த பகிடிவதையை முதலில் உங்கள் அக்கா, தங்கச்சியிடமிருந்து தொடங்குங்கள். இனத்துக்காக பேசுகிறோம், இனத்துக்காக போராடுகிறோம் என்பதெல்லாம் சாிதான். அதற்காக நீங்கள் செய்வதை எல்லாம் பாா்த்துக் கொண்டிருக்கும் அவசியம் இங்கு எவருக்கும் இல்லை.

பகிடிவதையின் பெயரால் நீங்கள் செய்தவைகளை ஒன்றுவிடாமல்
அப்படியே எழுத முடியும். எழுத இயலாமல் இல்லை. என்பதை புாிந்து கொள்ளுங்கள். இன்னும் நீளுமானால் சில விடயங்கள் குறித்து பொதுவாக எழுதும் அவசியம் எழாது. தனிப்பட்ட முறையில் பெயா்களை குறிப்பிட்டு எழுதம் தேவை எழும் என்பதை புரிந்து கொண்டால் நன்று.

Radio