July 2019
நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? - கசிந்தது இரகசிய தகவல்.
அரசுக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது. அந்தவகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாக்கெடுப்பில் எவ்வாறான நிலைய கொண்டுள்ளது என்பது தொடர்பில் சில இரகசிய தகவல்கள் கசிந்துள்ளது.
நேற்யை தினம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரையின் போது மன்னார் மாவட்டத்தில் கட்டப்பட்ட வீடுகளில் ஆட்கள் குடி போகவி;ல்லை என்பதையும் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படவில்லை என்றும் கத்தி கூச்சலிட்டு தாங்கள் வீர ஆவேசப் பேச்சுக்களால் சபையை அதிரவைத்து அரசுக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்பதுபோன்றதான ஒரு மாயை உருவாக்கியிருந்தார்கள். ஆனால் தமிழ் மக்களின் முக்கிய விடயங்களான காணாமல் ஆக்கப்பட்டோர்,அரசியல் கைதிகள் விடுதலை,காணி விடுவிப்பு போன்ற விடயங்களில் வாய் திறக்காமால் மௌனமாக இருந்துள்ளார்கள்.
இது இவ்வாறு இருக்க மறுபுறம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஜக்கிய தேசியக் கட்சியிடம் இருந்து பெற்று கொள்வதற்கு இன்னும் நிறைய இருக்கின்றது என அண்மையில் ஊடகங்களுக்கு பகிரங்கமாக தெரிவித்திருந்தார். இவ் விடயம் தொடர்பில் நாம் மேலும் துருவிய போது தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் பிரதமருக்கும் இடையில் மந்திர ஆலோசனை ஒன்று நடைபெற்றுள்ளதாகவும் அதில் பின்வரும் விடயங்களை பெற்று தருவதாக பிரதமர் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறிய முடிகிறது.
1.கம்பெரலியா வேலைத்திட்டத்தில் விடுவிக்கப்படாமல் இருக்கும் எஞ்சிய நிதிகளை உடனடியாக விடுவிப்பதாகவும்.
2.பனை அபிவிருத்தி நிதியத்திற்கான நிதியை விரைவில் விடுவிப்பதாகவும்
3.பிரதமரின் கீழ் உள்ள மீள் குடியேற்ற அமைச்சின் ஊடாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சிபாரிசின் மூலம் நூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகவும்
4.வரவிருக்கும் பொது தேர்தல் மற்றும் மாகாண சபை தேர்தலுக்கான தேர்தல் செலவுகளை பொறுப்பேற்று கொள்வது போன்ற விடயங்களை செய்து தருவதாக பிரதமர் கூறியுள்ளதாக தெரியவருகிறது.
இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் இப்போதே அடுத்த தேர்தலில் வெற்றிபெற்றுவிட்டோம் என்ற உள்ளார்ந்த மகழ்ச்சியில் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவுள்ளனர்.
நேற்றைப்போலவே இன்று மாலைவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளின் காரசாரமான உரைகளை பாராளுமன்றில் கேட்க முடியும் நாளை செய்தி தாழ்களிலும்,இணைய தளங்களிலும்,பாராளுமன்ற ஹன்சாட்டிலும் இவர்களின் உரை முழுமையான பதிப்போடு வெளிவரும். ஆனால் இன்று மாலை வாக்களிப்பின்போது அனைவரும் இவ் அரசாங்கம் கவிழாமல் இருப்பதை உறுதி செய்து கொள்வார்கள். இதுவே நிதர்சனமான உன்மை.