SuperTopAds

ஒற்றன்..!

February 2020

பிரதேச வாதம் பேசும் வடபகுதி கட்சிப் பத்திரிகை!.

யாழ் மாவட்டத்திற்கு மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவர் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டமைக்கு தமிழரசுக் கட்சியின் பத்திரிகை ஒன்று கிழக்கு மாகாணத்தில் இருந்து மாவட்டச் செயலாளர்களை வடக்கில் நியமனம் செய்வதை சுட்டிக்காட்டியுள்ளது.

ரணில்-கூட்டமைப்பு ஆட்சியில் கிளிநொச்சி அரச அதிபராக மட்டக்களப்பை சேர்ந்த ஒருவரும் அதேபோல் வவுனியா மாவட்டத்திற்கு மூன்று தடவை தென்பகுதியை சேர்ந்த பெரும்பாண்மை இனத்தவரும் அவர்களை தொடர்ந்து கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மாற்று சமூகத்தை சேர்ந்த ஒருவரும் அரச அதிபர்களாக நியமிக்கப்பட்டார்கள்.

கூட்டமைப்பு-ரணில் ஆட்சியில் வடக்கு மாகாணத்தில் சகல திணைக்களங்களிலும் சிற்றூளியர்களிலிருந்து உயர் பதவிகள் வரை பெரும்பண்மை இனத்தை சேர்ந்தவர்கள் நியமனம் செய்யப்பட்ட வேளையில் குறித்த யாழ்ப்பாண தமிழரசுக் கட்சிப் பத்திரிகை தனது கட்சியினுடைய விசுவாசத்திற்காக மௌனம் காத்திருந்தது.

கூட்டமைப்பும் அவர்களது கட்சிப் பத்திரிகையும் தமிழ் மக்கள் நலனைப் பற்றித் துளியளவும் சிந்திக்காமல் தமது சுயலாப அரசியலுக்காக தமிழரசுக் கட்சியை முன்னிலைப்படுத்துவதற்காக எமது தியாகங்கள் அத்தனையையும் குழிதோண்டி புதைத்துள்ளனர்.

அதிதீவிர தமிழ் தேசியம் பேசிக்கொண்டும் மறுபக்கத்தில் வடக்கு கிழக்கு பிரதேச வாதத்தை தூக்கிப்பிடித்துக் கொண்டும் எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றிக்கொண்டு இருக்கின்றார்கள் என்பதை கிழக்கு மாகாண மக்கள் தமிழரசுக் கட்சியின் இரட்டை வேடத்தை புரிந்துகொள்ள வேண்டும்.

கிழக்கு பிரதேசவாதம் பேசும் தமிழரசுக் கட்சிப் பத்திரிகை கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சம்பந்தன் அவர்கள் கூட்டமைப்பின் தலைவராக பதினெட்டு வருடங்கள் இருக்க முடியுமாயின் கிழக்கைச் சேர்ந்த இலங்கை நிர்வாக சேவையின் அதிகாரிகள் ஏன் வடக்கில் மாவட்ட செயலாளர்களாக இருக்க முடியாது.

வடக்கு மாகாணத்தில் இருக்கும் இலங்கை நிர்வாக சேவை தரம்-1ல் இருக்கும் தமிழர்கள் மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதேவேளையில் கடந்த அரை நூற்றாண்டு காலமாக வடபகுதியை சேர்ந்த அரச அதிகாரிகள் இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும் பல பதவி நிலைகளிலும் தமிழர்கள் இருந்திருக்கின்றார்கள் தற்போதும் இருக்கின்றார்கள்.இவற்றை புரிந்து கொள்ளாமல் தமிழரசுக் கட்சியின் பத்திரிகை தமிழ் மக்களிடம் வடக்கு-கிழக்கு என்று தமது சுயநல அரசியலுக்காக பிரதேசவாதத்ததை தூண்டி விடுவதை யாரும் ஏற்றுக்கொள் முடியாது.

நல்லாட்சியில் பெரும்பாண்மை இனத்தை சேர்ந்தவர்களுக்கும் மாற்று சமூகத்தினருக்கும் வடக்கு நோக்கி நியமனங்கள் வழங்கப்படும்போது தமிழரசுக் கட்சியும் அவர்களது கட்சிப் பத்திரிகையும் ஏன் சுட்டிக்காட்டவில்லை கிழக்கு மாகாண மக்களே இவர்களது சந்தர்ப்பவாத இரட்டைவேட அரசியலை இனங்கண்டு அதற்கேற்றாற் போல் செயற்பட வேண்டும்.

தேசியத் தலைவரின் வழிகாட்டலைப் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் அற்றவர் துரைராசசிங்கம்.

தமிழர் அரசியலில் மாற்று அணியின் உருவாக்கம் என்பது தேசியத் தலைவரின் வழிகாட்டலுக்கு முரணானது என்ற கருத்தை இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் துரைராசாசிங்கம் தெரிவித்துள்ளார்.

இவருடைய இக் கூற்றானது தமிழ் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகங்களையும் கேள்விகளையும் தோற்றுவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாக்கவில்லை எனவும் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் விடுதலைப் புலிகள் எவ்வித பங்கும் வகிக்கவில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் பகிரங்கமாக தெரிவித்துவரும் நிலையில் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் அவர்கள் இவ்வாறு விடுதலைப் புலிகளுடைய புகழைப் பாடுவதை பார்க்கின்றபோது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இப்பொழுதே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவட்டார்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது.

தேர்தல் காலத்தில் விடுதலை புலிகளின் புகழைப் பாடுவதும் பின்பு விடுதலைப்புலிகளும் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டவர்கள் விடுதலைப்புலிகளாலும் அனேகமான மக்கள் கொல்லப்பட்டனர்,காணாமல் ஆக்கச்செய்யப்பட்டனர் என்று பாராளுமன்றத்திலும்,சர்வதேசத்திலும் கூறுவது வழக்காமான இவர்களது செயற்பாடாகும்.
கட்சியினுடைய பொதுச் செயலாளராக இருந்து தமிழ் மக்கள் நலன் சார்ந்து பேச வேண்டிய சந்தர்ப்பங்கள் எல்லாவற்றையும் கோட்டைவிட்டு இன்று தாங்கள் உத்தமர்கள் போலவும் விடுதலைப்புலிகளின் ஏக பிரதிநிதிகள் எனவும் கூறி மக்கள் முன் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேசியத் தலைவரின் கருத்துக்கு முரணாக ஒரு மாற்றுத் தலைமை உருவாகியுள்ளது என கருத்து கூறும் இவர்கள் தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைக்கு முரணான தமிழ் மக்களுக்கும் எதிரான வரவுசெலவுத்திட்டத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை அளித்தனர் மேலும் தமிழ் மக்களையும் விடுதலைப் புலிகளையும் அழிப்பதற்கு இலங்கை அரசால் கொள்வனவு செய்யப்ட்ட ஆயுதங்களுக்கு தமிழ் மக்களை வரி செலுத்தவும் வைத்துள்ளார்கள்.

மேலும் தமிழரசுக் கட்சியின் எழுபதாவது ஆண்டு நிறைவு விழாவில் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டது ஒரு நல்லவிடயமாக இருக்கலாம் என்று கூட்டமைப்பின் தலைவர் பகிரங்கமாக கூறியிருந்தார்.இன்று இவ்வாறு வீர ஆவேசப் பேச்சுக்களை பேசும் துரைராஜசிங்கம் அதே மேடையில் ஒரு மறுப்பு தெரிவிக்காமல் வாய் மூடி மெளினியாக இருந்துவிட்டு இன்று ஏதோ திடீர் என்று ஞானம் பிறந்தது போல் கருத்து தெரிவிப்பது. இவர்களது இரட்டை நிலைப்பாட்டை மிகத் தெளிவாக காட்டுகின்றது எனலாம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தமிழர் விரோத செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து அக் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களால் ஒரு மாற்று அணி உருவாகியுள்ளது அவ் மாற்று அணியினால் தங்களது பாராளுமன்ற ஆசனங்களுக்கு ஏதும் ஆபத்து வந்துவிடுமோ என்ற மனோநிலையில் தான் இவ்வாறு விடுதலைப் புலிகளை நினைவு கூர்ந்து உள்ளார் என எண்ணத் தோன்றுகின்றது.

கிழக்கு மாகாண சபையில் துரைராசசிங்கமும்,தண்டபாணியும் பொம்மைகளாக இருந்து கொண்டு கூட்டமைப்புக்கு 11 உறுப்பினர்களும் இருந்தும் 7 உறுப்பினர்களை கொண்ட முஸ்லீம் காங்கிரசுக்கு முதலமைச்சர் பதவியை தாரைவார்த்து கொடுத்து நஸீர்அகமட்டை முதலமைச்சராக்கி கிழக்கு மாகாணத்தையே முஸ்லீம்களுக்கு தாரைவார்த்து கொடுத்தனர்.

இவர் பிரபாகரனைப்பற்றியும் தமிழ் தேசியத்தை பற்றியும் கதைப்பற்கு முன் கடந்த எழுபது வருடகாலம் தமிழரசுக் கட்சி தமிழ் மக்களையும்,போராட்டத்தையும் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்து நீர்த்துப்போகச் செய்த இவர்களுக்கு எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் தகுந்தபாடம் புகட்டுவார்கள் என புத்திஜீவிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

விக்கி கூட்டணியைக் கண்டு சாரைப்பாம்பின் மேல் மண்ணெண்ணை ஊற்றியது போல் பதறியடிக்கும் மாவை!

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் நான்கு கட்சிகள் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டதை தொடர்ந்து தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் கிழக்கு மாகாண தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவர்களைப் போன்று தாம்தான் உண்மையான தமிழ் தேசியப் பற்றாளர்கள் என்று கூறிக்கொண்டு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட இருக்கின்ற கஜேந்திரகுமார் அணியினரும் ஏனையவர்களும் சாரைப் பாம்பின் மேல் மண்ணெண்ணை ஊற்றியது போன்று பதறியடிக்கின்றார்கள்.

கடந்த இரண்டு தசாப்தங்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தமிழ் மக்கள் ஒற்றுமையாக தமது வாக்குப் பலத்தை அளித்துள்ளனர் இந்த எண்ணிக்கையையும் ஒற்றுமையயையும் கூறிக்கொண்டு தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாட்டிலேயே தமிழரசுக்கட்சியும் கூட்டமைப்பினரும் ஈடுபட்டு ரணில்-மைத்திரி அரசை பாதுகாத்து வந்தனர்.

இவர்களுடைய பிரதான நோக்கம் தமிழ் மக்களுக்காக பேரம்பேசி பெற்றுக்கொள்ளவேண்டிய பல சந்தர்ப்பங்கள் இருந்தபோதும் எந்தவொரு பேரம்பேசலும் இல்லாமல் நிபந்தனையற்ற ஆதரவை ஆளும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் தமது விசுவாசத்தை காட்டி வந்தனர்.

பேரம் பேச வேண்டிய இடங்களான பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம், நான்கு வரவு செலவுத் திட்டம், ஐநா மனித உரிமை பேரவையில் கால நீடிப்பு இப்படி பல சந்தர்ப்பங்கள் கிடைத்த நேரத்தில் அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்வர்கள் விவகாரம், காணி விடுவிப்பு, வடக்கு கிழக்கில் மீள்குடியேற்றம், அபிவிருத்தி, போரால் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய விசேட தேவைக்கு உட்பட்டவர்களின் பிரச்சினைகள், பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் இவைகள் எவற்றுக்குமே பேரம்பேசாமல் ஆளும் கட்சியின் பங்காளிகளாக இருந்து கொண்டு தமது தனிப்பட்ட தேவைகளை தேர்தல்காலத்தில் பணம், பங்களா மற்றும் சொகுசு வாகனங்களுக்காகவும் தமது குடும்ப உறுப்பினர்களின் வேலைவாய்ப்பிற்காகவும் பயன்படுத்தியதன் விளைவே தமிழ் மக்களுக்கான மாற்றுத் தலைமையின் தேவை காலத்தின் தேவையாக உருவெடுத்துள்ளது. இதற்கு வழிவகுத்தவர்களும் கூட்டமைப்பினரே.

கடந்த எழுபது வருடகாலமாக தமிழ் மக்களை தமது சொந்த அரசியல் இருப்புக்காக சிங்களத் தலைவர்களிடம் அடகுவைத்த மிதவாத தலைமைகளின் நடவடிக்கைகள்தான் கடந்த முப்பத்தைந்து வருடகாலம் பல்வேறு விடுதலை இயக்கங்கள் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர். அதற்கு முக்கிய காரண கர்த்தாக்களாக தமிழரசுக் கட்சியினுடைய பிற்போக்கு தலைமையும் அதனுடைய வழிகாட்டலுமே பல்லாயிரக்கணக்கான போராளிகளும் பொதுமக்களும் மடிந்து போவதற்கு காரணமானது

இன்று தமது சுகபோக பாராளுமன்ற அரசியலுக்கு ஆபத்து வந்துவிட்டது என்று சாரைப்பாம்பின் முதுகில் மண்ணெண்ணை பட்டது போல் பதறியடிக்கின்றார்கள். பொதுமக்களே, புத்திஜீவிகளே, புலம்பெயர் தேசத்தில் வாழும் எம்உறவுகளே, இளைஞர்களே மீண்டும் மீண்டும் கடந்த எழுபதுவருடகாலமாக எம்மை ஏமாற்றிய குள்ள நரிக் கூட்டத்தை அரசியல் அரங்கில் இருந்து ஒதுக்கி புதிய மாற்று அரசியல் தலைமையை பலப்படுத்த முன்வருவோம்.