சைக்கிளை முந்திய திசைகாட்டி

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் தமிழரசு கட்சி 135 ஆசனங்களை பெற்றுள்ளது.
நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் யாழ்ப்பாணத்தில் தமிழரசு கட்சி 88 ஆயிரத்து 443 வாக்குகளை பெற்று 135 ஆசனங்களை பெற்றுள்ளது.
அதேவேளை தேசிய மக்கள் சக்தி 56 ஆயிரத்து 615 வாக்குகளை பெற்று , 81 ஆசனங்களை பெற்றுள்ளது.
அத்துடன் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 51 ஆயிரத்து 46 வாக்குகளை பெற்று , 79 ஆசனங்களை பெற்றுள்ளதுடன் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 35 ஆயிரத்து 647 வாக்குகளை பெற்று 46 ஆசனங்களை பெற்றுள்ளது.