SuperTopAds

இறக்காமம் பிரதேச சபை உறுப்பினராக சமூக சேவகர் கே.எல்.சமீம் தெரிவு

ஆசிரியர் - Editor III
இறக்காமம் பிரதேச சபை உறுப்பினராக சமூக சேவகர் கே.எல்.சமீம் தெரிவு

இறக்காமம் பிரதேச சபை  உறுப்பினராக சமூக சேவகர் கே.எல்.சமீம்  தெரிவு-

2025 ஆண்டிற்கான உள்ளுராட்சி மன்ற  தேர்தல் இறுதி முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இறக்காமம் பிரதேச சபைக்கு சுயேட்சைக்குழு  கால்பந்து சின்னம் சார்பில் போட்டியிட்ட சமூக சேவகர் கே.எல்.சமீம் பட்டியல் உறுப்பினராக தெரிவாகியுள்ளார்.

கடந்த 06.05.2025 அன்று நடைபெற்று முடிந்த 2025 ஆண்டிற்கான உள்ளுராட்சி மன்ற தேர்தல் முடிவிற்கமைய இறக்காமம் பிரதேச சபை 6,7 ஆம் வட்டாரத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட  சமூக சேவகர் கே.எல்.சமீம் தலைமையிலான சுயேட்சை அணி 436 வாக்குகளை பெற்றிருந்தது.

அத்துடன் பட்டியல் நியமனத்திற்கமைய ஒரு உறுப்பினரை மேற்குறித்த சுயேட்சைக்குழு பெற்றுக்கொண்டுள்ளதுடன்   13 உறுப்பினர்களை கொண்ட   இறக்காமம் பிரதேச சபை  வரலாற்றில் முதன் முதலாக சபைக்கு சுயேட்சைக்குழு சார்பில் சமூக சேவகர் கே.எல்.சமீம் உறுப்பினராக தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் உள்ளுராட்சிமன்ற  தேர்தல் காலத்தில் இறுதியாக இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் சமூக சேவகர் கே.எல்.சமீம் சுமார்  4 மணித்தியாலயங்கள்  தனது உரையினை மேற்கொண்டு மக்களுக்கான தெளிவான  விளக்கங்களை வழங்கி இருந்தார்.

சிங்களத்தில் நல்ல பாண்டித்தியம் உள்ள இவர் அனைத்து மக்களையும்  கவரும் தன்மை கொண்டவர் என்பதுடன் எல்லோருடனும் சகஜமாகப் பழக்ககூடியவராவார்.அரசியலில் அதிக ஈடுபாடு கொண்ட இவர் முன்னாள் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி செயலாளர் நாயகம் ஹஸன் அலியின் வண்ணாத்தி பூச்சி கட்சியின் ஊடாக  நேரடி அரசியலை ஆரம்பித்து சிலகாலம்  முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனுடன்  பயணித்து பின்னர் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ்வோடு இணைந்து இறக்காமம் பிரதேசத்திற்கு தன்னாலான சேவைகளை செய்தவர் என்பதும் சுட்டிக்காட்டத்த்கது.