SuperTopAds

கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளைப் பெற தலைமைத்துவம் கிழக்கைச் சேர்ந்தவரே இருக்க வேண்டும்-கலாநிதி ஹக்கீம் செரீப்

ஆசிரியர் - Editor III
கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளைப் பெற தலைமைத்துவம் கிழக்கைச் சேர்ந்தவரே இருக்க வேண்டும்-கலாநிதி ஹக்கீம் செரீப்

கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளைப் பெற தலைமைத்துவம் கிழக்கைச் சேர்ந்தவரே இருக்க வேண்டும்-கலாநிதி ஹக்கீம் செரீப் 

கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளைப் பெற தலைமைத்துவம் கிழக்கைச் சேர்ந்தவரே இருக்க வேண்டும் என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பிரதித் தலைவர் தொழிலதிபர் கலாநிதி ஹக்கீம் செரீப் தெரிவித்தார்.

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் மாளிகைக்காடு கிழக்கு வட்டார தேர்தல் காரியாலயத்தில் மேற்கொண்ட இறுதிப்பிரச்சார கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் சார்பாக காரைதீவு பிரதேச சபைக்கான தேர்தலில் வண்ணாத்துப்பூச்சி சின்னத்தில் மாளிகைக்காடு கிழக்கு வட்டாரத்தில் போட்டியிடும் இளம் ஆளுமை சமூகச்செயற்பாட்டாளர் ஆர்.எம்.தானிஸ் ரஹ்மதுல்லாஹ்வின் தலைமையில் மாலை இக்கூட்டம்  நடைபெற்றது.

இதன்போது ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் உப தலைவர் தொழிலதிபர் கலாநிதி ஹக்கீம் செரீப் மற்றும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் இணைப்புச் செயலாளர் ஏ.எம்.அகுவர் ஆகியோர் உட்பட இக்கூட்டத்தில் 2025ம் ஆண்டிற்கான காரைதீவு பிரதேச சபைக்கு ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அங்கு உரையாற்றிய ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் உப தலைவர் தொழிலதிபர் கலாநிதி ஹக்கீம் செரீப்

கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளைப் பெற தலைமைத்துவம் கிழக்கைச் சேர்ந்தவரே இருக்க வேண்டும் எனவும் இத்தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டுமென்பதற்காக எமது இளைஞர்கள்  இறக்கியுள்ளனர். இதனூடாக காரைதீவு பிரதேச சபையில் அதிகளவான ஆசனத்தை ஐக்கிய சமாதான கூட்டமைப்பு பெற்றுக்கொள்ளும். ஊழலற்ற ஆட்சியொன்றினை எமது கட்சி மேற்கொள்ளும்.  என்றார்.