SuperTopAds

தமிழ் மக்களின் இருப்பை இல்லாதொழிக்க முனைகின்றது அரசு!

ஆசிரியர் - Admin
தமிழ் மக்களின் இருப்பை இல்லாதொழிக்க முனைகின்றது அரசு!

யாழ்ப்பாணத்தின் அடையாளத்தை மாற்ற இடமளிக்கமாட்டேன் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாநகர வேட்பாளர்கள் ஈசன் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் வெள்ளிக்கிழமை (02) நடாத்திய ஊடக சந்திப்பை சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.     

வடக்கு கிழக்கில் பாரிய கட்டமைப்புடன் பயணிக்கும் கட்சியாக எமது கட்சி இருக்கின்றது. இம்முறை தேர்தல் ஆணையகத்தால் எமது ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டபோதும் நாம் எமது உரிமையை மீண்டும் சட்டத்தின் ஊடாக பெற்றுக்கொண்டோம்.

ஆதலால் எமக்கு பிரசாரத்துக்கான காலமும் குறைவாகிப் போனது. ஆனாலும் மக்கள் எமது கரங்களை பலப்படுத்துவர்கள் என்று நம்புகின்றோம்.

யாழின் அடையாளங்களை சிதைத்து தமிழ் மக்களின் இருப்பையும் வாழிடங்களையும் இல்லாதொழிக்கும் செயற்பாடுகளை இன்றைய அரசு செய்ய முனைகின்றது. இவர்களது இந்த சூட்சித்தனமான செயற்பாடுகளுக்கு மக்கள் இடம் கொடுக்கக் கூடாது.

மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற போர்வையில் கட்டமைக்கப்பட்டிருந்த தமிழரசுக் கட்சிக்குள் இருந்துவரும் குழப்பங்களும் குழிபறிப்புகளுமே தேசிய மக்கள் சக்தியின் வடக்கிற்கான காரணமாகும்.

இவர்களது இந்த போக்கின் காரணமாக அதிருப்தியடைந்த தமிழ் மக்கள் வெளிப்படுத்திய கசப்பான பாடமே கடந்த பொதுத் தேர்தலின் பெறுபேறுகளாக இருந்தது.

இதேநேரம் நகர கட்டுமாண அபிவிருத்தி என்பது யாழ். நகரில் சரியான பொறிமுறையின்றை கொண்டிருக்கவில்லை. இதுவே யாழ். மாநகரின் அபிவிருத்தியின் வீழ்ச்சிக்கும் பின்னணியாகவும் இருக்கின்றது.

தமிழ் அரசியல் பரப்பில் இருக்கும் எனவே ஆற்றலுள்ள இளைஞர்களிடம் பொறுப்பை வழங்குவது அவசியமாகும் எனவே எமது கட்சிக்கு ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.