சம்மாந்துறையில் நோன்பு கால உணவுப் பாதுகாப்பு நடவடிக்கை

சம்மாந்துறையில் நோன்பு கால உணவுப் பாதுகாப்பு நடவடிக்கை
சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸஹீலா இஸ்ஸதீன் ஆலோசனையின் பிரகாரம் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம். நௌசாத் வழிகாட்டலில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் உட்பட பொதுச்சுகாதார பரிசோதகர்கள் உரிய நடவடிக்கைள் எடுத்து வருகின்றனர்.
இதற்கமைய தற்போதைய நோன்பு காலத்தை முன்னிட்டு உணவுப் பாதுகாப்பின் நிமிர்த்தம் சில உணவு விற்பனை நிலையங்கள் அடையாளம் காணப்பட்டு பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.இதன் போது காலாவதியான மற்றும் மனித பாவனைக்கு உதவாத சில உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பின்னர் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்காக உட்படுத்தப்பட்டு ரூபா 10000 தண்டப்பணம் அறவிடப்பட்டது.
மேலும் சந்தேகத்திற்கு இடமான உள்ளூர் உற்பத்தி மங்கொ யூஸ் வகைகள் ஒரு வகை நூடில்ஸ் மற்றும் தேங்காய் எண்ணெய் போன்றன அதன் உள்ளடக்கத்தை அறிய அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.இது தவிர நோன்பு கால உணவுப் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு கட்டமாக இப்தாருக்கான சிற்றுண்டி உற்பத்தி செய்யப்படும் இடம் பல சரக்க கடைகள் என்பன பரிசோதிக்கப்பட்டதுடன் QR முறை மூலம் செய்யப்பட்ட முறைப்பாடும் விசாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.