SuperTopAds

யாழ்ப்பாணத்தில் இணையக் குற்ற விசாரணைப் பிரிவு!

ஆசிரியர் - Admin
யாழ்ப்பாணத்தில் இணையக் குற்ற விசாரணைப் பிரிவு!

யாழ்ப்பாணத்தில் இணையக் குற்ற விசாரணைப் பிரிவு பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வட மாகாணத்தில் இணையக் குற்றங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. 

இதனால், இணையக் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைப்பதற்காகக் கொழும்புக்குச் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது. எனவே, இந்த விடயம் தொடர்பில் பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே, யாழ்ப்பாணத்தில் இணையக் குற்ற விசாரணைப் பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.