SuperTopAds

கிளிநொச்சியில் கார் மோதி சைக்கிளில் சென்றவர் பலி!

ஆசிரியர் - Admin
கிளிநொச்சியில் கார் மோதி சைக்கிளில் சென்றவர் பலி!

கிளிநொச்சி A9 வீதி கனகாம்பிகைக்குளம் சிவன்கோயில் முன்பாக நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற விபத்தில் 56 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த கார் உள் வீதியிலிருந்து பிரதான வீதிக்கு திரும்பி துவிச்சக்கரவண்டியில் சென்ற குறித்த முதியவர் மீது மோதியதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.     

விபத்தில் பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 56 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.