கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்

கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்
கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் புதன்கிழமை (23) இரவு கல்முனை ஆசாத் பிளாஷா வரவேற்பு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இப்பொதுக்கூட்டம் கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தகர் சங்கத்தின் தலைவர் ஏ.பி. ஜமால்தீன் ஹாஜி தலைமையில் நடைபெற்றதுடன் கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்க செயலாளர் ஏ.எல். கபீர் மற்றும் பொருலாளர் ஐ.எல்.எம் யூசூப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது பொதுச் சந்தையில் உள்ள வர்த்தகர்கள் கடை உரிமையாளர்கள் வியாபாரத்துக்கு அமர்த்தப்பட்டுள்ளவர்கள் அங்காடி வியாபாரிகள் கல்முனை பொதுச் சந்தையின் வீதியோர வியாபாரிகள் மீன் சந்தை வியாபாரிகள் வியாபார ஸ்தலங்களில் உள்ள உதவியாளர்கள் என பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்க செயலாளர் ஏ.எல். கபீர் உரையாற்றுகையில் சந்தைப் பகுதியை மீள் கட்டுமானம் செய்யும் நடவடிக்கைக்க பங்களிப்பு வழங்கிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் உட்பட கல்முனை மாநகர பொதுச் சந்தையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்த மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி உட்பட கல்முனை மாநகர சபையினருக்கு நன்றிகளை தெரிவித்தார்.இது தவிர பொதுச் சந்தையில் உள்ள குறைபாடுகள் தேவைப்பாடுகள் அதன் அபிவிருத்தி குறித்து விரிவாக குறிப்பிட்டதுடன் ஒவ்வொரு பொதுச் சந்தை வியாபாரிகளும் ஒழுக்க விழுமியங்களை கடைப்பிடித்து நுகர்வோருடன் சிநேகபூர்வமாக நடந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.
இது தவிர கல்முனை பொதுச் சந்தை குறைபாடுகளை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சந்தையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பிலும் அங்கு வியாபாரம் செய்யும் வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டு உரிய தரப்பிடம் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான சுமூகத் தீர்வுகள் எட்டப்பட்டுள்ளது.
அத்துடன் சந்தையிலுள்ள கடைகளுக்கான வாடகை நிலுவைகளை அறவிடுதல் வாடகைக் கட்டணங்களை சீரமைப்பு செய்தல் உள்ளிட்ட விடயங்கள் ஆராயப்பட்டதுடன் கல்முனை மாநகர பொதுச் சந்தையினதும் வர்த்தகர்களினதும் நலன் கருதி கல்முனை மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் வர்த்தகர் சங்கம் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என குறிப்பிட்டார்.எதிர்வரும் சர்வதேச தொழிலாளர் தினமன்று கல்முனை மாநகர பொதுச் சந்தை மூடப்பட்டு அங்கு உள்ள அனைத்து வர்த்தகர்கள் உட்பட தொழிலாளர்கள் சந்தையில் உள்ள வர்த்தகர்கள் சிலரின் பொருளாதார பங்களிப்புடன் ஒன்றுகூடல் சுற்றுலா ஒன்றும் தயார் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின் தொடர்ச்சியாக புதிதாக தெரிவு செய்யப்பட்ட முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் அல்-ஹாஜ் எம். ஐ. அப்துல் அஸீஸ் பொன்னாடை போர்த்தப்பட்டு கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தினரால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இந் நிகழ்வில் கல்முனை பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.கபீர்,பிரதித் தலைவர் அல்ஹாஜ் எம்.எம் கபீர், பிரதிச் செயலாளர் எஸ்.எல் றாயீஸ் , உப தலைவர் ஏ.எச் தன்சூல் மற்றும் அல்ஹாஜ் ஏ.எல்.எம்.கபூல் ஆஸாத், எம்.ஐ.எம் நஜீம், அல்ஹாஜ் எம்.கரீம், எஸ்.எம்.நிசார், எம் தன்சீல், ஏ.எப்.எம் பர்சான் உட்பட ஏனைய நிர்வாக சபை உறுப்பினர்கள் வர்த்தகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.