SuperTopAds

சிறுவன் பாதுகாப்பற்ற நீர் குழியில் சடலமாக மீட்பு -சம்மாந்துறை பொலிஸார் விசாரணை முன்னெடுப்பு

ஆசிரியர் - Editor III
சிறுவன் பாதுகாப்பற்ற நீர் குழியில் சடலமாக மீட்பு -சம்மாந்துறை பொலிஸார் விசாரணை முன்னெடுப்பு

சிறுவன் பாதுகாப்பற்ற நீர் குழியில் சடலமாக மீட்பு -சம்மாந்துறை பொலிஸார் விசாரணை முன்னெடுப்பு

வீட்டின் அருகில்  விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் சடலமாக  பாதுகாப்பற்ற   நீர் குழியில்  இருந்து மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது.


அம்பாறை மாவட்டம்  சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியான   உடங்கா -02 பௌஸ் மாவத்தை  பகுதியில் இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை(22) மாலை  இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் மூன்று வயது மதிக்கத்தக்க முஹம்மத் லுக்மான் என்ற  ஆண் பிள்ளை  நீர் குழியிலிருந்து மரணமடைந்த நிலையில்  மீட்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.சுமார் 3 மணித்தியாலமாக அப்பகுதியில் காணாமல் சென்றிருந்த  குறித்த சிறுவனை   பொதுமக்களுடன்  இணைந்து  பொலிஸாரும் தேடிய நிலையில்  அச்சிறுவனின்  வீட்டுக்கு அருகில் உள்ள வெற்றுக்காணியில் உள்ள பாதகாப்பற்ற    நீர்க்குழிக்குள்   மரணமடைந்த நிலையில் சிறுவன் சடலமாக  மீட்கப்பட்டார்.

மேலும்  இச்சிறுவன் தவறி குறித்த குழியில் விழந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டு போடப்பட்டாரா  என மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.அத்துடன்  இச்சம்பவத்தில் கிடைக்கப்பெற்ற சிசிரிவி காணொளி ஒன்றில் இனம் தெரியாத நபர்   மரணமடைந்த சிறுவனை   அழைத்துச் செல்லும் காட்சி ஒன்றும்   பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.எனினும் சிறுவனை யார் அழைத்து  செல்கின்றார்கள் என்பது தெளிவாக   அடையாளம் காண முடியாமல் உள்ளது.அத்துடன்  குழிக்குள் சிறுவன் எப்படி விழுந்தார்    என்பதும் குறித்தும் குழப்பமான ஒரு நிலையும்  காணப்படகின்றது.
 
இது தவிர  மரணம் அடைந்தசிறுவனின் சடலம்  தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு வருகை தந்த சம்மாந்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச. ஜெயலத் தலைமையில் பொலிஸார்  மேலதிக விசாரணைகளை   மேற்கொண்டு வருகின்றனர்.