போதை மாத்திரைகளை இளைஞர்களுக்கு விநியோகம் செய்தவர் கைது

போதை மாத்திரைகளை நீண்ட காலமாக இளைஞர்களுக்கு விநியோகம் செய்த சந்தேகத்தின் அடிப்படையில் 29 வயது சந்தேக நபரை பெரியநீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது செவ்வாய்க்கிழமை(22) இரவு அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள மருதமுனை புறநகர் பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது சுமார் 700 க்கும் அதிகமான போதை மாத்திரைகளை தன்வசம் வைத்திருந்த 29 வயது சந்தேக நபர் கைதானார்.
மேலும் சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப் பொருட்கள் என்பன சட்ட நடவடிக்கைக்காக கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க வழிநடத்தலில் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.