ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் காரைதீவு வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்

ஜனாதிபதி பேரினவாத சக்திகளின் ஒர் சூழ்நிலை கைதியாக இருக்கின்றார்-ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாகலிங்கம் இரட்ணலிங்கம் ( குருபரன்)
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் காரைதீவு வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் காரைதீவு பிரதேச சபையில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வும் ஊடக சந்திப்பும் காரைதீவு பொது நூலக கேட்போர் மண்டபத்தில் புதன்கிழமை(23) மாலை நடைபெற்றது.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஹென்றி மகேந்திரன் தலைமையில் இவ் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாகலிங்கம் இரட்ணலிங்கம் ( குருபரன்) பிரதான பேச்சாளராக கலந்து சிறப்பித்தார்.ஈபிஆர்.எல்.எப் மத்திய குழு உறுப்பினரும் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான சிவசுந்தரம் புண்ணியநாதன்( கரன்) கலந்து சிறப்பித்தார்.
காரைதீவு பிரதேச சபையில் போட்டியிடும் பிரதான வேட்பாளர் ரவிச்சந்திரன் ( சங்கரி) உள்ளிட்ட வேட்பாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
இறுதியில் ஊடகச் சந்திப்பு இடம்பெற்றது.
ஜனாதிபதி பேரினவாத சக்திகளின் ஒர் சூழ்நிலை கைதியாக இருக்கின்றார் என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாகலிங்கம் இரட்ணலிங்கம் ( குருபரன்) தெரிவித்தார்.
காரைதீவு பொது நூலக கேட்போர் மண்டபத்தில் புதன்கிழமை(23) மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலம் அங்கு கருத்து தெரிவிக்கையில்
ஜனாதிபதி பேரினவாத சக்திகளின் ஒர் சூழ்நிலை கைதியாக இருக்கின்றார்.இதுவரை ஜனாதிபதியை விமர்சிப்பதற்கான எந்த சந்தர்ப்பமும் எமக்கு கிடைக்கவில்லை.இந்த நாட்டில் எந்த ஜனாதிபதியாக வந்தாலும் இவ்வாறு சூழ்நிலை கைதியாகவே இருப்பார்.அத்துடன் ஜனாதிபதி செய்வார் என எதிர்பார்த்த எந்தவொரு விடயங்களையும் அவர் செய்யவில்லை. எனவே அவர் பொய் தான் பேசுகின்றார் என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடியும்.எங்களது உள்ளுராட்சி மன்ற வேட்பாளர்களுக்கும் ஜனாதிபதி மாதிரி பொய் வாக்குறுதிகளை எமது மக்களுக்கு பிரச்சார வேளையில் வழங்க வேண்டாம் என தெளிவாக அறிவுறுத்தியுள்ளோம்.மக்கள் இவ்வாறான பொய் வாக்குறுதிகளால் தான் சலித்து பொய் உள்ளனர்.எமது வட கிழக்கில் தமிழ் தேசிய அரசியல் வீழ்ச்சிக்கு காரணம் கொள்கைகள் அல்ல.தவறான வாக்குறுதிகளும் வாக்குறுதிகளை மீறியமையும் ஆகும். என குறிப்பிட்டார்.