ரணிலின் பிரதான பாதுகாப்பு அதிகாரி காங்கேசன்துறைக்கு மாற்றம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியான பொலிஸ் பரிசோதகர் அசோக்க ஆரியவன்ச உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கு பணி இடமாற்றம் செய்ய பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பொலிஸ் பரிசோதகர் அசோக்க ஆரியவன்ச இன்று வியாழக்கிழமை (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் பரிசோதகர் அசோக்க ஆரியவன்ச முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்புப் பிரிவில் 23 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
இவர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக 15 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
இந்த பணி இடமாற்றத்திற்கான உத்தியோகபூர்வ காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.