SuperTopAds

தந்தை செல்வாவின் கொள்கையுடன் தமிழரசுடன் இணைந்து பயணிக்கத் தயார்!

ஆசிரியர் - Admin
தந்தை செல்வாவின் கொள்கையுடன் தமிழரசுடன் இணைந்து பயணிக்கத் தயார்!

தமிழ் அரசுக் கட்சி தலைமைத்துவம் தந்தை செல்வா அவர்களது கொள்கையுடன் பயணிக்கத் தயாராக இருந்தால் அவர்களுடன் பேசுவதற்கும் இணைந்து செயலாற்றவும் நாம் தயார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.     

நெல்லியடியில் நேற்றிரவு நடந்த மேதினக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை அறிவித்துள்ளார்.

தமிழ் அரசுக் கட்சியை நாம் ஒரு போதும் அழிக்க நினைத்ததில்லை அதனை அழிக்கவும் கூடாது, அழிக்கவும் முடியாது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.