தொல்புரம் சிறுமி துஷ்பிரயோகம்- பிரதான சந்தேக நபர் கைது!

யாழ்ப்பாணம் , வட்டுக்கோட்டை தொல்புரம் பகுதியில் தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாக கூறப்படும் இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் குறித்த சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய பிரதான சந்தேக நபர் இன்று வியாழக்கிழமை (01) வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கொஸ்தா தலைமையிலான குழுவினர் நேரடியாக சென்று இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை அறுவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை வெள்ளிக்கிழமை (02) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.