SuperTopAds

பருத்தித்துறை கடற்கரையில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம்

ஆசிரியர் - Admin

பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரையில் இளம் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் நேற்று (04) பிற்பகல் கரையொதுங்கியுள்ளது. 

இவ்வாறு சடலமாக கரை ஒதுங்கியவர் தும்பளை கிழக்கை சேர்ந்த 36 வயதுடைய பெண்ணொருவர் என பொலிஸார் தெரிவித்தனர். 

கடற்கரையில் சடலம் காணப்படுவதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். 

மரணத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.