நல்லை ஆதீன முதல்வரின் அஸ்தி பிரதிஷ்டை நிகழ்வு

நல்லை ஆதீன குரு முதல்வரின் நினைவு பிரார்த்தனை வைபவமும் அஸ்தி பிரதிஷ்டை நிகழ்வும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நல்லை ஆதீனத்தில் இடம்பெற்றது.
ஸ்நபன அபிஷேகம் முத்தமிழ்க்குருமணி நா.சர்வேஸ்வரக்குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.
சித்தாந்த பண்டிதர் கு.ஜெகதீஸ்வரக்குருக்கள் பூஜை வழிபாடுகளை நிகழ்த்தினார்.
அதனை தொடர்ந்து நல்லை ஆதீன முதல்வரின் அஸ்தி பிரதிஷ்டை நிகழ்வு கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் இடம்பெற்றது