“வடக்கின் போா்” என வா்ணிக்கப்படும் இரு பாடசாலைகளுக்கிடையிலான கிாிக்கெட் போட்டி 7ம் திகதி ஆரம்பம்..
மொபிட்டல் நிறுவனத்தின் அனுசரணையும் 'வடக்கின் போர்' என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும். இடையிலான நூற்றாண்டு கால கிரிக்கெட் போட்டி வரும் 7ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகி 3 நாள்கள் நடைபெறுகின்றது.
113ஆவது இன்னிங்ஸ் போட்டியான இது இம்முறையும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டியின் பாதுகாப்பு இரண்டு கல்லூரி சமூகத்தாலும் பொலிஸாரிடம் வழங்கப்பட்டுள்ளது.
போதையில் அடாவடியில் ஈடுபடுவோர் தண்டிக்கப்படுவர் என கூறப்பட்டுள்ளது. இந்தப் போட்டி தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பும், வீரர்கள் அறிமுக நிகழ்வும் இன்று யாழ்.மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.
மதுபோதை அல்லது போதைப் பொருள்கள் பாவனையுள்ள எவரும் போட்டியைப் பார்க்க அரங்குக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
இரு கல்லூரி மாணவர்களும் சீருடையுடன் மட்டுமே மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவர். பழைய மாணவர்களும் நலன்விரும்பிகளும் இருப்பிட வசதிகொண்ட பகுதிக்காக 100 ரூபா பணத்தை வழங்கி அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
சுப்பிரமணியம் பூங்கா பக்கம் உள்ள நுழைவாயில் மூடப்படும்.சென்.ஜோன்ஸ் கல்லூரி மாணவர்களும் ஆசிரியர்களும் பழைய மாணவர்களும் பொதுநூலகப் பக்கமாக மைதானத்துக்கு மேற்குத் திசையிலிருக்கும் வாயில் ஊடாக அனுமதிக்கப்படுவர்.
ரிம்பர் மண்டப பக்கமாக உள்ள வாயில் ஊடாக மத்திய கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்.
அணிகளின் வீரர்களும் மாணவ தலைவர்களும் தவிர்ந்தோர் எல்லைக்கோட்டுக்குள்ளே எக்காரணம் கொண்டும் உட்பிரவேசிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.
ஆரம்ப நாள் நிகழ்வு வியாழக்கிழமை முற்பகல் 9.15 மணிக்கு வீரர்கள் அறிமுகம் இடம்பெற்று போட்டி மு.ப.10 மணிக்கு போட்டி ஆரம்பமாகும் என கல்லூரி அதிபர்கள் தெரிவித்தனர்.