தமிழீழ விடுதலை போராட்டத்தின் நீட்சியே தமிழ்தேசிய கூட்டமைப்பு என்கிறாா் நா.உறுப்பினா் சி.சிறீதரன்..
இலங்கையில் இனப்படுகொலைகள் நடைபெற்றமைக்கான சாட்சிகள் உள்ளபோதும் அதற்கான விசாரணைகளை மேற்கொள்ளவும், குற்றமிழைத்தவா்களை தண்டிப்பதற் கும் சா்வதேசம் தயங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரன் கூறியுள்ளாா்.
வவுனியா, வெடுக்குநாரி மலைக்கு அவர் இன்று (சனிக்கிழமை) விஜயம் மேற்கொ ண்டிருந்தார். இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண் டவாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவித்த அவர், “எமது மக்களின் வாழ்வியல் அடையாங்கள், இருப்பு, வாழ் வாதாரம் என்பவற்றை காப்பாற்றவேண்டிய கட்டாயத்திற்குள் நாம் தள்ளப்பட்டு ள்ளோம்.
தமிழர் உரிமைகள் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கு பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அந்த நீட்சியை முன்னெடுத்துச் செல்கின்றது. புலிகள் காலத்தில் 1994ஆம் ஆண்டு சந்திரிக்கா மற்றும் 2004 இல்
ரணிலுடனான ஒப்பந்தம் போன்றே நாங்களும் சில தந்திரோபாய நடவடிக்கையில் தான் அரசாங்கத்திற்கு நல்லெண்ணங்களை வெளிப்படுத்திவருகின்றோம். நாம் பலவீனமான நிலையில் அதனை வழங்கவில்லை.
தமிழ் மக்களின் விடுதலைக்காக நாம் எவ்வாறான விட்டுக் கொடுப்புக்களைச் செய்ய முடியுமோ அதனை நாம் எமது மக்களை இழக்காமல், அவர்களின் ஆணையை மீறாமல் கையாளுகின்றோம்.
ஜ.நா.வில் கால நீடிப்பு தொடர்பாக ரெலோ ஒரு கருத்தை முன்வைத்துள்ளது. அது அவ ர்களது ஜனநாயக கருத்து சுதந்திரம். நாங்கள் அதனை கால அவகாசம் என்று பார்க்கமுடியாது. கடந்த மூன்று வருடங்களாக அரசாங்கத்தின்
நடவடிக்கைகளை சர்வதேசம் பார்வையிட்டிருந்ததே தவிர அது ஒரு கால அவகாசம் இல்லை. ஒரு இறைமையுள்ள நாட்டிற்குள் அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு சர்வதே ச சமூகம் இதுவரை தயாராகவில்லை.
இனப்படுகொலை நடைபெற்றதற்கான சாட்சிகள் இருந்தும் அதனை முன்வைப் பதற்கு எந்த நாடும் தயாராகவில்லாத நிர்க்கதியான நிலை தற்போது இருக்கிற து. எ ன வே கால அவகாசம் என்பதை நாம் கையாளவில்லை.
சர்வதேச நாடுகளின் மேற்பார்வை இருக்கவேண்டும் என்பதில் கரிசனையை செலுத் துகின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.