ஐ.நாவில் வாய்பாா்க்க போகிறவா்களும், பக்க நிகழ்வுகளுக்கு போகிறவா்களும், கொக்காிக்க கூடாது..
ஐ.நா மனித உாிமைகள் ஆணையகத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு எந்த பிரதிநி தித்துவமும் இல்லை. இந்நிலையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கவேண்டும், வழங்ககூடாது. என தமிழ்தேசிய கூட்டமைப்பினால் என்ன செய்ய முடியும்?
உண்மை இதுவாக இருக்க இங்கிருந்து ஐ.நா மனித உாிமைகள் ஆணையகத்திற்குச் செல்லும் சிலா் அங்கு பக்க நிகழ்வுகளில் கலந்துகொண்டுவிட்டு, இங்குவந்த கொக் காிப்பதுடன், ஊடகங்களுக்கு செய்தியும் கொடுக்கின்றனா்.
மேற்கண்டவாறு தமிழரசு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மா வை சேனாதிராஜா கூறியுள்ளாா்.
தெல்லிப்பழை மருத்துவமனையில் மருத்துவர்களுக்கான விடுதி, ஒட்சிசன் வழங்கும் நவீன ஆய்வு கூடம் என்பவற்றைத் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இ ந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கை ஐ.நா. தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதிலிருந்து விலகுவதாக அறி வித்துள்ளது. அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார். ஆனால் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள்,
தீர்மானத்துக்கு கட்டுப்பட்டுச் செயற்படவேண்டும் என்று இணக்கம் தெரிவித்துள்ள னர். இலங்கைக்கு கால அவகாசம் கொடுங்கள் என்று நாம் ஒருபோதும் கேட்டதில் லை. அவ்வாறு சொன்னதும் இல்லை.
ஆனால் இங்குள்ள சிலர் நாம் கால அவகாசம் பெற்றுக் கொடுத்துவிட்டோம் என்று கூறுகின்றார்கள். அறிக்கை விடுகின்றார்கள். அவர்கள் முதலில் ஒன்றைத் தெரிந்து கொள்ளவேண்டும்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பிரதிநிதித்து வ ம் இல்லை. அங்கு உறுப்பினர்களாக உள்ள நாடுகளே இதனைத் தீர்மானிக்கின்றன. இங்கிருந்து செல்லும் சிலர் அங்கு ஓரமாக அறைகளில் கொக்கரித்துவிட்டு
தங்கள் பேச்சுக்களும் அங்கு எடுபட்டதாக நினைத்து ஊடகங்களுக்குச் செய்தி கொ டுக்கின்றனர். இலங்கை அரசு போர்க்குற்ற விசாரணை உள்பட பல விடயங்களைச் செய்வதாக உறுதியளித்தே ஐ.நா. தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இலங்கையை ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு கொண்டு செல்லவேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். அது முடியுமா? வீட்டோ அதிகாரம் உள்ள நாடுகளில் சீனாவும் இருக் கின்றது. அதனைத் தாண்டி செயற்பட முடியுமா?
இவர்கள் சொல்வது போல நடந்து கொண்டால், இலங்கை அரசு ஐ.நா. தீர்மானத்திலி ருந்து விலகி முழு வெற்றியடைந்து விடும். ஒரு நாட்டுக்கு எதிரான தீர்மானம் கொ ண்டு வரப்படும்போது உலக நாடுகள் ஏற்றுக் கொள்கின்றது
என்றால் அதன் அர்த்தத்தை நாங்கள் விளங்கிக் கொள்ளவேண்டும் -– என்றார்.