வடக்கில் 4மாவட்ட செயலகங்களுக்குள் ஒரு நாளில் புகுத்தப்பட்ட 7 சிங்கள ஊழியா்கள், நாி புத்தியை காட்டும் ரணில்..
வடக்கில் 4 மாவட்ட செயலகங்களுக்கு மிக இரகசியமாக ஒரு நாளில் அதிகளவான சிங்கள இளைஞா்களை புகுந்தி பிரதமா் ரணில் விக்கிரம சிங்க வழங்கிய வாக்குறுதியினை மீறியுள்ளாா்.
வடகிழக்கில் சிங்களவர்களை சிற்றூழியர்களாக, சாரதிகளாக நியமிக்கமாட்டோம் என்று தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய வாக்குறுதி மீண்டும் மீறப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாகாணங்களில் கொழும்பு அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிலுள்ள திணை க்களங்களுக்குச் சிற்றூழியர்க ளாக, சாரதிகளாக தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள இளைஞர்கள் கடந்த காலங்களில் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இது தொடர்பில் தமிழ்த் வடக்கில் தேசியக் கூட்டமைப்பு, தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்தியிருந்தது. தென்பகுதியைச் சேர்ந்தவர்கள் வடகி ழக்கில் நியமிக்கப்பட மாட்டார்கள் என்று உறுதியளித்திருந்தார்.
தலைமை அமைச்சரின் உறுதிமொழியை மீறி கடந்த காலங்களிலும் சிங்களவர்கள் சிற்றூழியர்களாகவும், சாரதிகளாகவும் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த நடவடிக்கை தற்போதும் தொடர்வதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
கடந்த 25ஆம் திகதி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டச் செயலகங்களுக்கு தென்பகுதியைச் சேர்ந்த 7பேர் சாரதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதே மாவட்டச் செயலகங்களில் வடக்கைச் சேர்ந்த பலர்
அமைய அடிப்படையில் பணியாற்றும் நிலையில் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.