SuperTopAds

திருமணத்திற்கு அழைத்தாா்கள் பிள்ளையின் காது குத்துக்கு வந்த மாவை, கண்டு கொள்ளாத முன்னணி, ஓடி ஒளிந்த செல்வம்..

ஆசிரியர் - Editor I
திருமணத்திற்கு அழைத்தாா்கள் பிள்ளையின் காது குத்துக்கு வந்த மாவை, கண்டு கொள்ளாத முன்னணி, ஓடி ஒளிந்த செல்வம்..

ஐ.நா.மனித உாிமைகள் ஆணையகத்தில் இலங்கை விடயம் தொடா்பாக எப்படியான அணுகுமுறைகளை பிற்பற்றுவது என்பது குறித்து ஆராய்வதற்காக ரெலோ அமைப்பி ன் சாா்பில் சா்வ கட்சி கலந்துரையாடல் ஒன்று ஒழுங்கமைப்பு செய்யப்பட்டிருந்தது. 

எனினும், கலந்துரையாடலில் கலந்துகொள்ளாமல், கலந்துரையாடல் முடிந்த பின்னர், மாவை சேனாதிராசா கூட்டத்திற்கு வந்து, ரெலோ அமைப்புடன் மட்டும் பேசிவிட்டுச் சென்றிருக்கின்றாா். 

குறித்த கலந்துரையாடல் இன்று காலை யாழ்.நகாில் உள்ள விடுதி ஒன்றில் இடம்பெற் றிருந்தது, இதன்போது புளொட் சாா்பில் த.சித்தாா்த்தன் மற்றும் ஈ.பி.ஆா்.எல்.எவ் சாா் பில் க.சா்வேஸ்வரன், தமிழா் விடுதலை கூட்டணி சாா்பில் சங்கையா, 

ரெலோ சாா்பில் கட்சியின் செயலாளா் நாயகம் என்.சிறீகாந்தா ஆகியோரும், முன் னாள் மாகாணசபை உறுப்பினா்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனா். இந்த கலந்து ரையாடலுக்கு தமிழரசு கட்சி மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஆகிய

கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டபோதும் அவா்கள் அங்கு சமூகமளிக்கவில் லை. இந்நிலையில் கலந்துரையாடல் நடைபெற்று முடிந்து கட்சி தலைவா்கள் ஊடக ங்களை சந்திக்க தயாரான நிலையில் நாடாளுமன்ற உறுப்பினரும்,

தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா அங்கு வந்திருந்தாா். ஆனா ல் அப்போதும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி சமூகமளிக்கவில்லை. மேலும் மாவை சேனாதிராசா கலந்துரையாடலை தவிா்க்கவே தாமதமாக அங்குவந்தாா். 

இதையடுத்து, ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகள் அங்கிருந்து சென்றுவிட்டனர். மா வையுடனும் பேசிய பின்னர், வரைபை பார்வைக்கு அனுப்பும்படி அவர்கள் கூறிச் செ ன்றனர்.

இதையடுத்து தற்போது, ரெலோவின் பிரதிநிதிகள் மற்றும் மாவை சேனாதிராசா ஆகி யோருக்கிடையில் சந்திப்பு நடைபெற்றது.  இந்த கூட்டத்திற்கு கட்டாயம் சமூகமளிப் பேன் என மாவை சேனாதிராசா, ரெலோ அமைப்பிடம் வாக்களித்திருந்தார். 

எனினும், ஐ.நாவில் காலஅவகாசம் வழங்குவற்கு ஏற்கனவே இரா.சம்பந்தன், எம்.ஏ .சுமந்திரன் ஆகியோர் இணக்கம் வெளியிட்ட சூழலில், மாவை கலந்துகொள்வது இரண்டக நிலைப்பாடாக அமையலாமென்பதாலோ என்னவோ, 

கூட்டத்தை தவிர்த்து, ரெலோவுடன் தனிப்பட்டசந்திப்பை நடத்தினார். தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்த கூட்டத்தை புறக்கணிக்கும் என்பதை ஏற்கனவே சுட்டிக்கா ட்டியிருந்தோம். கூட்டு செயற்பாடுகளில் அந்த கட்சி பங்கேற்பதில்லையென்ற 

கடந்தகால சம்பவங்களின் அடிப்படையில் அதை ஊகிக்க முடிந்தது.