முக்கிய விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக அவசரமாக கொழும்பில கூடுகிறது தமிழ்தேசிய கூட்டமைப்பு..
ஐ.நா மனித உாிமைகள் ஆணையக விவகாரம் மற்றும் புதிய அரசியலமைப்பு விவ காரம் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடா்பில் ஆராய்வதற்கும், தீா்மானங்களை இயற்றுவதற்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பு கொழும்பில் 5ம் திகதி கூடவுள்ளது.
புதிய அரசமைப்பில் முக்கிய விடயங்களான தேர்தல் முறைமை, நிறைவேற்று அதி காரம் என்பன தொடர்பில் கட்சிகள் இடையே பொது இணக்கப்பாடு எட்டப்படவில் லை.
அதிகாரப் பகிர்வு தொடர்பில் மட்டும் கட்சிகள் இடையே இணக்கப்பாடு ஒருமித்த கருத்து நிலவுவதால், அதிகாரப் பகிர்வை மட்டும் அரசமைப்பினுள் எப்படி புகுத்துவது அதனைச் செயற்படுத்துவது என்பது தொடர்பில் ஆராய்ந்து
அறிக்கை சமர்ப்பிப்பதற்கு 4 பேர் கொண்ட புதிய குழு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவால் நேற்றுமுன்தினம் நியமிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு மேலும் இரண்டு ஆண்டுகள்
கால அவகாசம் வழங்கும் வகையிலான தீர்மான முன்வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. புதிய அரசமைப்பு, ஐ.நாவின் கால அவகாசம் ஆகியவை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
வெவ்வேறு நிலைப்பாடுகளில் உள்ளனர். இந்நிலையில், இவை தொடர்பில் விலாவா ரியாக ஆராய்வதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு எதிர்வ ரும் 5ஆம் திகதி கொழும்பில் கூடுகின்றது.
5ஆம் திகதி பிற்பகல் ஒரு மணிக்கு நாடாளுமன்றம் கூடுகின்றது. அதற்கு முன் காலை யில் அல்லது மாலையில் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெறும்.