கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பின்னரும், மக்களை மீள்குடியேற்ற பஞ்சிப்படும் அரச அதிகாாிகள், காரணம் என்ன?
பச்சிலைப்பள்ளி -வேம்பொடுகேணி கிராமத்தில் வெடிபொருட்கள் அகற்றும் பணிக ள் நிறைவடைந்திருக்கும் நிலையில், மீள்குடியேற்றத்திற்காக சுமாா் 100 ஜாா் துாரம் மட்டுமே தயாா்ப்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனா்.
இந்தப் பகுதியில் வெடிப்பொருள்கள் அகற்றப்பட்ட 300 மீற்றர் தூரம் விடுவிக்கப்படவு ள்ளதென்று பிரதேச செயலகத்தினர் அறிவித்திருந்தனர். எமது காணிகளும் விடுவி க்கப்படவுள்ளன என்று கருதி கடந்த வாரம் அங்கு சென்றிருந்தோம்.
2013 ஆம் ஆண்டு வெடிப் பொருள்கள் அகற்றப்பட்ட பகுதியிலிருந்து சுமார் 100 யார் தூரத்தில் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளமையைக் கண்டு எமது காணிகள் விடுவிக் கப்படமாட்டாது என்று ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளோம்.
என்று 20 வருடங்களாக ஏதிலிகளாக உறவினர் வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் த ங்கியுள்ள மக்கள் தெரிவித்தனர். 2000 ஆம் ஆண்டு ஏற்பட்ட போர் காரணமாக இடம் பெயர்ந்த தங்களை 19 வருடங்களாக இன்னமும் ஏதிலிகளாகவே
தவிக்க விடுகின்றனர் என்று அவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். மக்கள் குடியிருப் புப் பகுதிகளில் வெடிப் பொருள்களை அகற்றி மீளக்குடிய மர்த்த நடவடிக்கை எடுக் குமாறு இடம்பெயர்ந்துள்ள மக்கள் அனைத்துத் தரப்பினரிடமும்
கோரிக்கை விடு விக்கின்றனர். குடியிருப்பு இல்லாத தென்னந் தோட்டப் பகுதிகளை யும், பற்றைக் காட்டுப் பகுதிகளையும் துப்பரவு செய்வதில் வெடிப் பொருள்கள் அகற் றும் நிறுவனத்தினர் அக்கறை காட்டிவருகின்றனர்.
வேம்பொடுகேணிப் பிரிவில் வெடிப் பொருள்கள் அகற்றப்பட்டுள்ள பகுதிகளில் சட்ட விரோதமாக மணல் அகழ்வுகளும் அங்குள்ள மரங்களைத் தறிக்கும் செயற்பாடுகளு ம் தினமும் பட்டப்பகலில் இடம்பெற்று வருகின்றன
என்று அங்கு மீளக்குடியமர்ந் துள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக பிர தேச செயலகத்தினர், பளைப் பொலிஸார் ஆகியோருக்கு முறையிட்டும் பயன் கிடை க்க வில்லையென்றும் அவர்கள் தெரிவித்தனர்.
“வெடி பொருள்கள் உள்ள பகுதிக்கு அரச அலுவலர்கள் செல்ல முடியாது என்பதால் வெடி பொருள்கள் அகற்றும் பிரிவினரால் வெடிப் பொருள்கள் அகற்றப்பட்டுள்ள தெ ன வழங்கப்படும் சான்றிதழுக்கமைய மீள்குடியமர்வு இடம்பெறும்”
என்று பச்சிலைப்பள்ளி பிரதேச செயலத்தினர் தெரிவிக்கின்றனர். எனினும் தமது குடியிருப்புப் பகுதிகளை முதலில் பயன்பாட்டுக்கு விடுங்கள் என்று மக்கள் கோரி க்கை விடுக்கின்றனர்.