SuperTopAds

புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலய பங்குனி உத்தர பொங்கல் விழா, ஏற்பாடுகள் தீவிரம்..

ஆசிரியர் - Editor I
புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலய பங்குனி உத்தர பொங்கல் விழா, ஏற்பாடுகள் தீவிரம்..

கிளிநொச்சி கரைச்சி புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தரப் பொங்கல் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் இன்று (01-03-2019) பகல் ஆலய முன்றலில் நடைபெற்றுள்ளது.

கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் பங்குனி உத்தரப்பொங்கல் விழா எதிர்வரும் 21ம்திகதி வெகுசிறப்பாகவுள்ளது.

இபபொங்கல் உற்சவத்தின் முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சத்தியசீலன் தலைமயில் இன்று (01-03-2019) பகல் நாகதம்பிரான் ஆலய முன்றலில் நடைபெற்றுள்ளது.

கடந்த 8ம்திகதி நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்திற்கு அமைவாக ஆலய சூழலை துப்பரவு செய்தல் வீதிகளை செப்பனிடுதல், குடிநீர் விநியோகம்;, போக்குவரத்துச்சேவை, பாதுகாப்புச்சேவை, 

மின்சார வசதி கழிவகற்றல் வர்த்தக நிலையங்களை ஏலமிடுதல், வைத்திய முதலுதவி சேவைகள், தாகசாந்தி நிலையங்கள் அமைத்தல், உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற முன்னேற்றங்கள் 

தொடர்பான மீளாய்வுகள் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளன. இதில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சத்தியசீலன், கண்டாவளைப்பிரதேச செயலகத்தின் உதவிப்பிரதேச செயலர் பிரதீப், 

தரமபுரம் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி கரைச்சிப்பிரதேச சபையின் செயலாளர் கம்சநாதன் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் , மற்றும் துறைசார் திணைக்களத்தலைவர்கள், 

ஆலயத்தொண்டர்கள், ஆலய நிர்வாகத்தினர் எனப்பலர் கலந்துகொண்டனர்.