யாழ்.சிறுப்பிட்டியில் பொலிஸாருடைய அனுமதியுடன் விபச்சார விடுதி இயங்குகிறதா..?

ஆசிரியர் - Editor I
யாழ்.சிறுப்பிட்டியில் பொலிஸாருடைய அனுமதியுடன் விபச்சார விடுதி இயங்குகிறதா..?

யாழ்.சிறுப்பிட்டி பகுதியில் கலாசார சீரழிவை ஏற்படுத்தும் விடுதிக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்ககை விடுக்கப்பட்டுள்ளது. 

யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற மாவட்ட சிவில் பாதுகாப்புக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோசினாலேயே மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 

சிறுப்பிட்டியில் இயங்கும் குறித்த விடுதி பிரதேச சபையினதோ அல்லது சுகாதார துறையினருடைய எந்தவிதமான அனுமதியும் பெறப்படாமல் இயங்கி வருகின்றது.

இவ்விடுதியில் கலாசார பிறழ்வுகளை ஏற்படுத்தும், சமூகத்திற்கு ஒவ்வாத செயற்பாடுகள் நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் என்னிடத்தில் தெரிவித்துள்ளனர். 

சமூகத்திற்கு ஒவ்வாத நடத்தைகள் குறித்த விடுதியில் நடப்பதை அடுத்து விடுதி உரிமையாளரிடம் சென்று அப்பகுதி மக்கள் நியாயம் கேட்ட போது, விடுதியில் நடைபெறும் அனைத்தும் பொலிஸாருடைய அனுமதியுடன் நடப்பதாக கூறியுள்ளார். 

இவ்விடயம் தொடர்பில் வலி.கிழக்கு பிரதேச சபை ஊடாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இருப்பினும் எந்தவிமான நடவடிக்கையினையும் பொலிஸார் மேற்கொள்ளவில்லை. அப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தவிசாயர் கோரியிருந்தார். 

இதற்கு பதிலளித்த காங்கேசன்துறை பிரிவு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் இவ்விடயம் தொடர்பில் தன்னிடத்தில் முறைப்பாடு பதிவு செய்யுமாறு கோரினார். 

தன்னிடத்தில் முறைப்பாடு செய்யப்பட்டால் ஒரு வாரத்திற்குள் விடுதியின் அனுமதி மற்றும் அங்கு நடைபெறும் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு