SuperTopAds

சுற்றிவளைத்த விசேட அதிரடிப்படை, 15 லட்சம் பெறுமதியான சட்டவிரோத வலைகளுடன் சிக்கிய மீனவா்கள்..

ஆசிரியர் - Editor I
சுற்றிவளைத்த விசேட அதிரடிப்படை, 15 லட்சம் பெறுமதியான சட்டவிரோத வலைகளுடன் சிக்கிய மீனவா்கள்..

முல்லைத்தீவு- தண்ணிமுறிப்பு குளத்தில் தங்கூசி வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட் டிருந்த குற்றத்திற்காக இரு மீனவா்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 15 லட்சம் ரூபாய் பெறும தியான தங்கூசி வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குளப்பகுதியில் இடம்பெற்ற இந்த சுற்றிவளைப்பில் நன்நீர் மீன் பிடித்தலுக்காக  தடை செய்யப்பட்ட சட்ட விரோதமான வைத்திருந்த குற்றத்திற்காக குறித்த  இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 15 இலட்சம் ரூபா பெறுமதியான 

தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.  இவ் சுற்றி வளைப்பினை தே சிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையின் பிராந்திய நீரியல் விரிவாக்கல் அலு வலகத்தின்  நீர் உயிரின செய்கை விரிவாக்கல் அதிகாரி யோகநாதன் நிசாந்தன் 

தலைமையில் அலுவலக உத்தியோகத்தர்களுடனும், மடுகந்தை விஷேட அதிரடிபடையின்  பொ றுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் அமுனுபுரவின் நெறிப்படுத்தலில் விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து இச் சுற்றிவளைப்பினை மேற்கொண்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட வலை மற்றும் நபர்களை (07.03 ) அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத் தப்படவுள்ளனர்.