மன்னார் மாவட்டத்தில் 600 ஆசிரியர்கள் இல்லை, வடக்கின் கல்வி எப்படி மேம்படும்..

ஆசிரியர் - Editor I
மன்னார் மாவட்டத்தில் 600 ஆசிரியர்கள் இல்லை, வடக்கின் கல்வி எப்படி மேம்படும்..

மன்னார் மாவட்டத்தில் காணப்படும் 600 ஆசிரியர் வெற்றிடங்களையும் நிரப்பி மாவட்டத்தின் கல்வி நிலையை வளர்ப்பதற்கு ஆவண செய்யுமாறு வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாணத்தின் 12 கல்வி வலயங்களில் இரு கல்வி வலயங்களைக் கொண்ட மன்னார் மாவட்டத்தில் தற்போது சகல பாடங்களிலுமாக தற்போதும் 600 வெற்றிடம் காணப்படுகின்றது. மன்னார் மாவட்டத்திற்கான ஆசிரியர்களைப் பொறுத்த மட்டில் அதிகமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து முதல் நியமனம் பெற்று வரும் ஆசிரியர்களே பணிக்கு அமர்த்தப்படுகின்றபோதிலும் தற்போதும் சில வலயங்களில் தேவைக்கும் அதிகமாக காணப்படுகின்றனர்.

இதிலும் குறிப்பாக வடக்கில் பெரிதும் தேவையாகவுள்ள கணித , விஞ்ஞான ஆசிரியர்களோடு ஆங்கில பாடத்திற்கான ஆசிரியர்கள் கூட ஒரு சில பாடசாலைகளில் 4, 5 பெரும் சில பாடசாலைகளில் நூலகர் ஆரம்ப பிரிவு பாடங்களிற்காகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு மேலும் சில பாடசாலைகளில் வகுப்பு ஆசாரியர்களாகவும் தமிழ் , சமய பாடங்களிற்காகவும் நியமிக்கப்பட்டு பிற மாவட்டங்களிற்குச் செல்லாது மறைக்கப்படுகின்றனர்.

இதன் காரணமாகவே வடக்கு மாகாணத்தில் அதிக வெற்றிடம் காணப்படுகின்றது. இதில் மடுக் கல்வி வலயத்தில் 200 ஆசிரியர்களும் மன்னார் கல்வி வலயத்தில் 400 ஆசிரியர்களுமாக மொத்தம் 600  ஆசிரிய வெற்றிடம் காணப்படுகின்றது. எனக் குறிப்பிட்டுள்ளார். 

இதேநேரம் மடுவில் காணப்பட்ட 200 ஆசிரிய வெற்றிடத்தின் பின்னர் அண்மையில் வழங்கிய நியமனத்தின் மூலம் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் 34 பேர் கடமையை பொறுப்பேற்றுள்ளனர். அதேபோன்று மன்னார் கல்வி வலயத்தில் 24 ஆசிரியர்களுமாக 58 பேர் நியமிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்தும் 542 ஆசிரிய வெற்றிடம் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு