ஜெனிவா செல்லும் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள்!

ஆசிரியர் - Admin
ஜெனிவா செல்லும் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள்!

ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் சிலர் பங்கேற்று சாட்சியமளிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் துளசி தெரிவித்துள்ளார்.

“யுத்தத்தில் ஈடுபட்ட தரப்பான இராணுவம், விமானப்படை அதிகாரிகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளில் கலந்து கொண்டு வருகிறார்கள். விடுதலைப்புலிகள் மீது அவர்கள் அங்கு யுத்தக்குற்றங்களை சுமத்தி வருகிறார்கள். ஆனால் அதற்கு தமிழர் தரப்பிலிருந்து முறையான பதில் அளிக்கப்படவில்லை. யுத்தத்தில் ஈடுபட்ட இன்னொரு தரப்பான விடுதலைப் புலிகள் இதுவரை ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு சென்று, பேசவில்லை.

இந்தநிலையில் விடுதலைப்புலிகள் சார்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்பது தொடர்பாக ஆராய்ந்து வருகின்றோம். தமிழ் தேசிய கூட்டமைப்பிடமும் இதுகுறித்து பேசியுள்ளோம். எதிர்வரும் சில தினங்களில் இதுகுறித்த முடிவை அறிவிப்பார்கள் என எதிர்பார்கின்றோம்“ என குறிப்பிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு