7 நாட்களுக்குள் 2 தடவை நீதிமன்றம் சென்று 2 தடவை தண்டணை பெற்ற நபா், திருந்தாத ஜென்மம் என்பது இதுவா?

ஆசிரியர் - Editor I
7 நாட்களுக்குள் 2 தடவை நீதிமன்றம் சென்று 2 தடவை தண்டணை பெற்ற நபா், திருந்தாத ஜென்மம் என்பது இதுவா?

மதுபோதையில் வாகனம் ஓட்டியமைக்காக நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்ட நபா் ஒருவா் தண் டணை பெற்று ஒரு வாரம்கூட ஆகாத நிலையில் மீண்டும் மதுபோதையில் வாகனம் ஓட்டியதற் காக 2ம் முறை தண்டிக்கப்பட்டுள்ளாா். 

யாழ்.சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு, கடந்த வாரம் மதுபோதையில் வாகனம் செலுத்தியமைக்காக சாவகச்சேரி பொலிஸாரால் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு தண்டம் விதிக்கப்பட்டது.

அதே தவறினை நேற்று மீண்டும் செய்த போது குறிதத் நபரைப் பொலிஸார் கைத செய்து, நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

 வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது பொலிஸார், கடந்த வாரம் நீதிமன்றினால் தண்டிக்கப்பட்டவர் என தெரிவித்ததையடுத்து எச்சரிக்கை செய்யப்பட்டு 20 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து சாரதிய அனுமதிப் பத்திரத்தை ஒரு வருடத்திற்கு நீதிமன்றில் தடுத்து வைக்குமாறும் உத்தரவிடப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு