ஒரு வாரத்திற்குள் வீட்டுத் திட்டத்தை வழங்காவிட்டால், முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக இறப்பேன். முன்னாள் போராளி எச்சாிக்கை..

ஆசிரியர் - Editor I
ஒரு வாரத்திற்குள் வீட்டுத் திட்டத்தை வழங்காவிட்டால், முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக இறப்பேன். முன்னாள் போராளி எச்சாிக்கை..

துணுக்காய்- ஆலங்குளம் கிராமத்தில் வசிக்கும் முன்னாள் போராளி ஒருவருக்கு வீட்டு திட்டம் வ ழங்காமல் அதிகாாிகள் தொடா்ச்சியாக இழுத்தடிப்பு செய்துவரும் நிலையில், ஒரு வாரத்திற்குள் வீட்டு திட்டம் தராவிட்டால் உண்ணாவிரதம் இருந்து சாவேன் என முன்னாள் போராளி எச்சாிக் கைவிடுத்திருக்கின்றாா். 

ஆலங்குளம் கிராம அலவலகர் பிரிவு துணுக்காய் பிரதேச செயலகப்பகுதியிலுள்ள முன்னாள் போரளியான சுப்பிரமணியம் குகதாஸூக்கு துணுக்காய் பிரதேச செயலாளரினால் வழங்கப்ப ட்ட வீட்டுத்திட்டம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.“உரிமை கோரப்படாத பொறுப்பற்ற கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளதையடுத்து, 

வழங்கப்பட்ட வீட்டுத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பிரதேச செயலரால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே எனக்கு வழங்க வேண்டிய வீட்டுத்திட்டம் தொடர்பாக கிராம அலுவலர் மற்றும் பிரதேச செயலர் பழிவாங்கியுள்ளனர் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளேன். 

சாதகமான பதில் ஒரு வாரத்துக்குள் கிடைக்காவிட்டால் சாகும் வரையில் உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்றினை உள்நாட்டு அலுவலக அமைச்சு மற்றும் மாவட்ட செலயகத்தின் முன்னால் மேற்கொள்வேன்” என்று முன்னாள் போராளி தெரிவித்துள்ளார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு