மாநகரசபையின் அறிவுறுத்தனை அசண்டை செய்து, மலக்கழிவுகளை தொடா்ந்தும் வெள்ள வாய்க்காலுக்குள் விடும் நாகவிகாரை..
யாழ்.ஆாியகுளம் நாக விகாரைக்கு சொந்தமான யாத்திாிகா் விடுதியின் மலக்கழிவுகள் அருகி ல் உள்ள வெள்ள வாய்க்காலுக்குள் தொடா்ந்தும் விடப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள மக்கள், அந்த வீதியால் செல்ல முடியாத அளவுக்கு துா்நாற்றம் வீசுவதாக கூறுகின்றனா்.
இந்த யாத்திரிகர்கள் தங்குமிடத்தில் ஒரேயொரு சிறிய மலசலகூடம் மட்டுமே உள்ளது. இந்த மலசல கூடத்தை தினமும் நூற்றுக் கணக்கானோர் பயன்படுத்துகின்றனர். அந்த மலக் கழிவுகள் நேரடியாக வெள்ள வாய்காலில் விடப்படு கின்றன.
இது தொடர்பாகப் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர். இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு மாநகர சபையிடம் தெரிவிக்கப்பட்டது. வாய்க்காலை மாநகர சபை ஊழியர்கள் பெரும் சிரமத்தின் மத்தியில் சீர் செய்தனர்.
ஆனாலும் தொடர்ந்தும் மலக்கழிவு நேரடியாக வாய்க்காலுக்குள் விடப்படுகின்றது என்று மக்கள் கூறுகின்றனர். இது தொடர்பில் விகாராதிபதியுடன் மாநகர சபை உறுப்பினர்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது,
இந்தக் கழிவுகள் கிடங்கு நிறைந்து மேலதிகமாகவே வெளியேறுகின்றன. தமக்கென ஓர் தனியான கழிவு அகற்றும் வாகனம் இருந்த நிலையில் அந்த வாகனம் தற்போது பழுதடைந்துள்ளது. அதனால் இராணுவத்தினரின் உதவியுடன் கழிவுகளை அகற்றி வந்தோம்.
தற்போது சில நாள்களாக அந்தச் சேவையும் இடம்பெறவில்லை என்று தெரிவித்தார் என்று சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர். ஆனால் மலக் கழிவுகள் வாய்க்காலுக்குள் விடப்பட்டமை தற்செயலானது அல்ல. இது பல நாள்களாக நடைபெறுகின்றது என்று மக்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பில் மாநகரசபையின் சுகாதாரக் குழுவைச் சேர்ந்த ந.லோகதயாளன், வ.பார்த்தீ பன் ஆகியோருடன் வட்டாரப் பிரதிநிதி ம.மயூரன், மாநகர சபை பொறியிலாளர்கள், மேற்பார் வையாளர்கள், சுகாதார அலுவலகர்கள் ஆகியோர் நேரில் சென்று நிலமை தொடர்பில் ஆராய்ந்து சீர் செய்ய ஏற்பாடு செய்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது.