நீதிக்கான எதிா்பாா்பை பறைசாற்றும் வகையில் மக்களே ஒன்றுபடுங்கள், வடக்கை முடக்குங்கள்.. சீ.வி.அழைப்பு..

ஆசிரியர் - Editor I
நீதிக்கான எதிா்பாா்பை பறைசாற்றும் வகையில் மக்களே ஒன்றுபடுங்கள், வடக்கை முடக்குங்கள்.. சீ.வி.அழைப்பு..

காணாமல் ஆக்கப்பட்டவா்களுக்கு நீதிவேண்டியும், இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்க கூடாது. என வலியுறுத்தியும் நாளை நடைபெறும் மக்கள் போராட்டம் மற்றும் பூரண ஹா்த்தாலு க்கு ஆதரவு கொடுங்கள் என வடமாகாண முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளாா். 

இது தொடர்­பில் அவர் விடுத்­துள்ள அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ள­தா­வது, கிளி­நொச்­சி­யில் எமது மக்­கள் தமது ஒருங்­கி­ணைந்த கருத்­துக்­களை நாளை வெளிக்­காட்­டும் போது உங்­க­ளு­டைய க டை­க­ளை­யும் வியா­பார நிலை­யங்­க­ளை­யும் மூடி வைத்து உங்­கள் அக்­க­றை­யை­யும் எங்­க­ளோடு இணைந்த உங்­கள் ஒருங்­கி­ணைந்த 

சிந்­த­னை­யை­யும் வெளிக்­காட்­டு­மாறு உங்­க­ளி­டம் அன்­பு­டன் வேண்­டிக் கொள்­கின்­றேன். உங்­கள் நிறு­வ­னங்­களை மூடு­வ­தால் உங்­க­ளுக்கு ஏற்­ப­டும் பொரு­ளா­தார இழப்பு, வணி­கத் தளர்ச்சி போன்­ற­வற்­றை­யும் பொது மக்­க­ளுக்கு ஏற்­ப­டும் சிர­மங்­க­ளை­யும் நாம் அறி­யா­த­வர்­கள் அல்ல. எனி­னும் எம் தமி­ழர்­க­ளின் விடிவை நோக்­கிய 

எமது பய­ணத்­தில் இந்­தக் கால­மா­னது மிக முக்­கி­ய­மா­ன­தொன்று – என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு