புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் திருவிழா, பொலித்தீன் மற்றும் மதுபான பாவனைக் கு கடுமையான தடை..
கிளிநொச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் பொங்கல் உற்சவத்தின் போது பொலீத்தீன் பாவனை மற்றும் மதுப்பாவனை என்பன முற்று முழுதாக தடைசெய்யப்பட்டுள்ள தாக ஆலய நிர்வாகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் எதிர்வ ரும் 21 திகதி நடைபெறவுள்ளது. இப்பொங்கல் உற்சவத்திற்கான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில்
கடந்த எட்டாம்திகதி ஆலயத்தில் நடைபெற்;றுள்ளது. இதனைத்தொடர்ந்து ஆலோசனைக்கூடடத் திற்கு அமைவாக பொங்கல் உற்சவத்திற்கான வேலைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரு கின்றது.
இதேவேளை ஆலோசனைக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக உற்சவ கால த்தில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தகர்கள் ஆலய பக்தர்கள் பொலித்தீனைப் பயன்படுத்த முடியாது என்றும்
குறித்த ஆலய வளாகத்தினுள் பொலித்தீன் பாவனை முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரி வித்த ஆலய நிர்வாகம் ஆலயத்தின் புனித தன்மை கருதி ஆலய வளாகத்தினுள் மதுபோதையில் நடமாடுதல் மது அருந்துதல்
என்பவற்றையும் முற்றாகத்தவிர்த்துக்; கொள்ளுமாறும் தெரிவித்துள்ள ஆலயநிர்வாகம் இவற் றை மீறிச்செயற்படுவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்து ள்ளது.