வடமாகாணம் நாளை முடக்கப்படுகிறது, பாடசாலைகள், போக்குவரத்து சேவைகளும் நாளை இடம்பெறாது..
காணாமல் ஆக்கப்பட்டோாின் உறவினா்களால் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டுள்ள பூரண ஹா்த் தால் மற்றும் பாாிய மக்கள் போராட்டத்திற்கு வடக்கில் உள்ள சகல பொது அமைப்புக்கள், வா்த் தக அமைப்புக்கள், அரசியல் தரப்புக்கள் பூரணமான ஒத்துழைப்பை வழங்கியுள்ள நிலையில்,
வடமாகாணம் நாளை பூரணமாக முடக்கப்படும். எனவும் அத்தியாவசிய தேவைகள், பொருட்கள் கொள்வனவு இருப்பின் அதனை இன்றே செய்யுங்கள். என வா்த்தகா் சங்கங்கள், அமைப்புக்கள் பொதுமக்களுக்கான அவிறித்தல் ஒன்றையும் விடுத்திருக்கின்றாா்கள்.
வர்த்தக மற்றும் போக்குவரத்துச் சேவைகள் எவையும்இடம்பெறாது என்பதுடன், அலுவலகங்கள், பாடசாலைகளும் முடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என்று வலியுறுத்தியும்,
காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இரண்டு ஆ ண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டும் நாளை திங்கட்கிழமை வடக்கு மாகாண முழுவதும் மு ழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, காலை 8.30 மணிக்கு கிளிநொச்சியில் கவனவீர்ப்புப் போராட்டமும் முன்னெடுக் கப்படவுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஆதரவு வெளியிட்டுள்ளன. சிவில் அமைப்புக்களும் தாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம்
என்று அறிவித்துள்ளன. இதனால் வடக்கு மாகாணத்தில் நாளைய தினம் போக்குவரத்துச் சேவை கள், வர்த்தக, வணிக, வங்கிச் சேவைகள் இடம்பெறாது என்று தெரிவிக்கப்படுகின்றது. ஆசிரியர் தொழிற்சங்கங்களும் நாளைய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இதனால் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கையும் முடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அலுவலகங்களின் செயற்பாடுகளும் இடம்பெறாது என்று கூறப்படுகின்றது.