கடமைகளை பொறுப்பேற்காத பட்டதாாிகள் விபரங்களை சமா்பியுங்கள், அதிகாாிகளுக்கு ஆளுநா் அதிரடி உத்தரவு..
வடமாகாண கல்வி அமைச்சினால் 249 பட்டதாாிகளுக்கு அரச வேலைக்கான நியமனம் வழங்க ப்பட்ட நிலையில், இதுவரை கடமைகளை பொறுப்பேற்காத பட்டதாாிகளுடைய விபரங்களை சமா்பிக்குமாறு வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் மாகாண கல்வி அமைச்சு அதிகாாிகளுக் கு உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
வேலையில்லாப் பட்டதாரிகள் தமக்கு வேலை வேண் டும், ஆசிரிய நியமனங்கள் வேண்டும் என் று வலியுறுத்தி யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டங் களை நடத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் வைத்து கடந்த ஜனவரி மாதம் 26ஆம் திகதி
249 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டன. நியமனம் பெற்றவர்களில் 160 பே ர் மட்டுமே பணியில் இணைந்துள்ளனர். ஏனையவர்கள் கடமைகளைப் பொறுப்பேற்க முன்வ ராத நிலையில், அத்தகைய பட்டதாரிகளின் விவரத்தைத் தருமாறு வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கோரியுள்ளார்.
வேலையில்லாப் போராட்டம்..
வடக்கு மாகாணத்தில் தமக்கு அரச வேலை இல்லை என்று பட்டதாரிகள் நடத்திய தொடர் போ ராட்டம் அனைவரும் அறிந்ததே. அவ்வாறு நீண்ட போராட்டங்களை மேற்கொண்ட பின்னர் கிடைக்கப்படும் நியமனங்கள் இவ்வாறு தட்டிக்கழிக்கப்படுகின்றன என்றால் அதற்குக் காரணம் என்னவாக இருக்க முடியும்?
வடக்குப் பட்டதாரிகளில் பெரும்பாலானவர்களின் கோரிக்கை ஒன்றாகத்தான் உள்ளது. அதா வது தமக்கு ஆசிரிய நியமனங்கள் அல்லது அரச நியமனங்கள் வேண்டும். அது தமது வீடுகள் அல்லது இருப்பிடங்களுக்கு மிக அருகாகவும் இருத்தல் வேண்டும் என்பதே அந்தக் கோரிக்கை. இன்று பல இளைஞர்கள்
சிறந்த தொழில் இல்லாமல் அனுதினம் துன்பப் படுகிறார்கள். இன்னும் சிலர் வேறு தேசங்களுக் குச் சென்று தமது குடும்பங் களை விட்டுப் பிரிந்தும்கூட தொழில் மேற்கொள்ள வேண்டிய நிலை யில் உள்ளனர். இவ்வாறிருக்கையில் கிடைக்கும் இந்த வாய்ப்பை வீணடித்து விட்டு பின்னர் அர சை நொந்துகொள்வதில் என்ன பயன் என்று கேள்வி எழுப்புகின்றனர் மக்கள்.