இலங்கை கடல் எல்லைக்குள் நுழையும் படகுகள் இனி பறிமுதல் செய்யப்படும்..

ஆசிரியர் - Editor I
இலங்கை கடல் எல்லைக்குள் நுழையும் படகுகள் இனி பறிமுதல் செய்யப்படும்..

இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழையும் வெளிநாட்டு மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்வத ற்கு மீன்பிடி அமைச்சு தீா்மானம் எடுத்துள்ளது. 

கடந்த வியாழக்கிழமைன்று கிளிநொச்சி நீதிவான் அளித்த தீர்ப்பை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பூநகரி கடலில் வைத்து கைப்பற்றப்பட்ட மூன்று மில்லியன் ரூபா பெறுமதியான படகு ஒன்றுடன் கைதுசெய்யப்பட்ட 10 தமிழக மீனவர்களுக்கு இரண்டு வருடத்துக்கு 

ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையை விதித்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  இலங்கை யின் கடல் வளங்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு 

முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருக்கட்டமாக வடக்கின் கடற்பகுதியில் நுழையும் வெளிநாட்டு படகுகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கை 

தொடர்பில் அண்மையில் மீன்பிடித்திணைக்களம், வடபகுதி சட்டத்தரணிகளுடன் கலந்துரையா டல்களை நடத்தியது.

இதன்போது வெளிநாட்டு படகுகளை பறிமுதல் செய்வதுடன் அவற்றை பொது ஏலத்தில் விடுவ தற்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு