கிளிநொச்சியில் அரச திணைக்களங்களில் நிறைக்கப்படும் சிங்கள இளைஞா், யுவதிகள்.. வழக்கம்போல் கூட்டமைப்பு உறக்கம்..
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பல அரச திணைக்களங்களில் காணப்படும் வெற்றிடங்களை பெரும்பாண்மையின இளைஞா், யுவதிகளை கொண்டு நிரப்பும் நடவடிக்கை அண்மைக்காலத் தில் அதிகாித்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் வேலையற்று காணப்படுகி ன்றனா். க.பொ.த சாதாரணம் தொடக்கம் பட்டதாரிகள் வரை இவ்வாறு வேலையற்றுக் காணப் படுகின்றனர். இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில்
உள்ள பல அரச திணைக்களங்களில் காணப்படுகின்ற வெற்றிடங்கள் கடந்த மூன்றாண்டுகளில் தென்னிலங்கையைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளால் நிரப்பட்டு வருகிறது. குறிப்பாக இலங்கை மின்சார சபை, புகையிரத திணைக்களம், வனவள திணைக்களம்,
வனஜீவராசிகள் திணைக்களம், நில அளவை திணைக்களம். மத்திய சுற்றுசூழல் அதிகார சபை, மற்றும் மாவட்டச் செயலகம் பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட பல திணைக்களங்களில் சாதாரன சிற்றூழியர்கள்இ சாரதிகள் தொடக்கம் பல பதவி நிலைகளுக்கு
இவ்வாறு தென்னிலங்கையைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் பணியிடங்களுக்கு நிரப்பட்டு வரு கின்றனர். யுத்தப் பாதிப்புகளுக்குள்ளான ஒரு மாவட்டத்தில் தகுதியிருந்தும் வேலையற்று பலர் உள்ள போதும் அரசியல் நியமனங்களால் இவ்வாறு நியமிக்கப்படுவது
மாவட்டத்தைச்சேர்ந்தவர்களை கவலைடையச் செய்துள்ளது. முக்கியமாக கடந்த மூன்றாண்டுக ளில் இவ்வாறு அதிகளவானர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.