வெள்ள வாய்காலில் விடப்பட்ட மலக்கழிவுகள், உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ள யாழ்.மாநகரசபை..

ஆசிரியர் - Editor I
வெள்ள வாய்காலில் விடப்பட்ட மலக்கழிவுகள், உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ள யாழ்.மாநகரசபை..

யாழ்.ஆாியகுளம் நாகவிகாரைக்கு சொந்தமான விடுதியிலிருந்து மலக்கழிவுகள் வெள்ள வாய்க் காலில் கலக்க விடப்பட்டமையை யாழ்.மாநகரசபையின் தமிழ்தேசிய கூட்டமைப்பு உறுப்பினா் ந.லோகதயான், மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி உறுப்பினா் வ.பாா்த்தீபன் ஆகியோா் அ டையாளப்படுத்திய நிலையில், 

இன்று மாலையே யாழ்.மாநகரசபையின் கழிவகற்றும் ஊழியா்களினால் வெள்ள வாய்க்கால் துா ய்மையாக்கப்பட்டுள்ளது.  ஆரியகுளம் சந்தியில் உள்ள விகாரையின் யாத்திரிகர்கள் தங்குமிடத் தில் உள்ள ஒரேயொரு சிறிய மலசலகூடத்தினை தினமும் நூற்றுக் கணக்கானோா்  பயன்படுத்து ம் நிலையில் அதனை சீர்செய்யாது 

மலக் கழிவுகளை நேரடியாக வெள்ளவாய்காலில் விடப்படுவது தொடர்பில் தொடர்ந்தும் பல மு றை சுட்டிக்காட்டியும் நடவடிக்கை எடுக்கப்படுவது கிடையாது . இதன் காரணமாக வீதியால் பய ணிப்பவர்களும் அயலில் உள்ளவர்களும் தினமும் பெரும் கொடுமையை அனுபவிக்கின்றோம். இ ருப்பினும் விகாரையினர் அது தொடர்பில் கண்டுகொள்வது கிடையாது.

எனவே இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு மாநகர சபையிடம் கோரிக்கை விடுத்த நிலையி ல் மாநகர சபை ஊரியர்கள் அப்பகுதியில் துப்பரவிற்காக இறங்கவே முடியாத தன்மையே காண ப்படுகின்றது. இருப்பினும் பெரும் சிரமத்தின் மத்தியில் குறிப்பிட்ட பகுதியை சீர் செய்தாலும் தொடர்ந்தும் மலக்கழிவு 

நேரடியாகவே வாய்க்கால் வழியாகவே வெளியேறுகின்றது. இது மொடர்பில் விகாராதிபதியுடன் விபரத்தை தெரியப்படுத்தும் நிலையில் குறித்த கழிவுகள் கிடங்கு நிறைந்து மேலதிகமாகவே வெளியேறுவதாகவும் தமக்கென ஓர் தனியான கழிவு அகற்றும் வாகனம் இருந்த நிலையில் குறி த்த வாகனம் தற்போது 

பழுதடைந்த நிலையில் கானப்படுவதோடு இராணுவத்தினர் இதனை அகற்றி உதவினர் சில நா ட்களாக அந்தச் சேவையும் இடம்பெறவில்லை. எனத் தெரிவித்தாக மாநகர சபை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இருப்பினும் இவ்வாறு மலக் கழிவுகள் வாய்க்காலில் விடும் செயலானது இன்று நேற்று நடைபெறும் 

சம்பவம் அல்ல நீண்ட காலமாகவே இடம்பெறுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. இது தொ டர்பில் மாநகரசபையின் சுகாதாரக் குருவைச் சேர்ந்த ந.லோகதயாளன் , வ.பார்த்தீபன் ஆகி யோருடன் மாநகர சபை பொறியிலாளர்கள் , மேற்பார்வையாளர்கள், சுகாதார உத்தியோகத் தர்கள் ஆகியோர் நேரில் 

சென்று நிலமையைச் சீர்செய்ய ஏற்பாடு செய்தனர். இந்நிலையில் மாநகரசபை உறுப்பினா்கள் சிலா் யாழ்.நகாில் உள்ள வா்த்தகா் ஒருவரை அழைத்து சென்று தாமே செய்ததாகவும், மாநகரச பையின் நடவடிக்கை போதாதெனவும் சமூக வலைத்தளங்களில் பேசி வருவது தொடா்பாக மக் கள் விமா்சனங்களை முன்வைத்துள்ளனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு