ஊழலை மறைக்க முண்டியடித்த ஈ.பி.டி.பி உறுப்பினர்கள், இறுதியில் மூக்குடைபட்டனர்..

ஆசிரியர் - Editor I
ஊழலை மறைக்க முண்டியடித்த ஈ.பி.டி.பி உறுப்பினர்கள், இறுதியில் மூக்குடைபட்டனர்..

யாழ்.மாநகரசபை ஆட்சி ஈ.பி.டி.பியிடம் இருந்த கால த்தில் யாழ்.கஸ்த்தூரியார் வீதியில் மாநகரசபை கா ணியில் கட்டப்பட்ட கட்டிடத்தை மாநகரசபை மீள பெ றுவதென சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த கட்டிடத் தொகுதியில் மூன்றா ம் மற்றும் நான்காம் மாடிகளை மகேஸ்வரி நிதியத் திற்கு வழங்காவிட்டால் குறித்த தீர்மானத்திற்கு தாங்கள் ஆதரவு அளிக்கப்போவதில்லை என்று கூறியிருந்த  ஈபிடிபியின் உறுப்பினர்கள் குறித்த தீர்மானத்திற்கு வாக்கெடுப்புக் கோரினர். 

அதனடிப்படையில் வாக்கெடுப்பின்போது ஈபிடிபியின் 11 உறுப்பினர்களும் குறித்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்த நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இணைந்து குறித்த தீர்மானத்தை ஆதரித்த நிலையில்  பெரும்பான்மையுடன் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

யாழ்.மாநகரசபையினை ஈபிடிபி கைப்பற்றி ஆட்சி செய்த கடந்த ஆட்சியின் போது யாழ்.மாநகர முதல்வராக இருந்த யோகேஸ்வரி பற்குணராசாவினால் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதிப்பகுதியில் முறைகேடான ஒப்பந்தங்களின் அடிப்படையில் கட்டப்பட்டதாகக் கூறப்பட்ட கட்டடத்தின் மூன்றாம் மற்றும் நான்காம் தளங்களை கட்டுவதற்கு அந்த கட்டிடப் பணியில் ஈடுபட்டிருந்த நிறுவனத்திற்கு நிதி வழங்கினோம் எனக் கூறி மகேஷ்வரி நிதியம் அதனைக் கையகப்படுத்தியிருந்து.  

பின்னர் குறித்த தளங்களில் ஈபிடிபியினால் நடாத்தப்படும் டிடி ரிவி தொலைக்காட்சி நிலையம் உள்ளிட்டவை இயங்கிவருகின்றன. குறித்த மூன்று மற்றும் நான்காம் தளங்களிற்கான வாடகைப் பணமும் இதுவரை செலுத்தப்படவில்லை என குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுவந்தன.

இந்நிலையில் தாங்கள் குற்றமற்றவர்கள் என்றும் குறித்த கட்டடம் முறைகேடான முறையில் கட்டப்படவில்லை என்றும் கூறிய ஈபிடிபி அது தொடர்பில் முழுநாள் விவாதம் நடத்தப்படவேண்டும் என்றும் யாழ் மாநகரசபை முதல்வரிடம் தொடர்ச்சியான கோரிக்கைகளை விடுத்துவந்தது. ஈபிடிபியின் வேண்டுகோளின் அடிப்படையில் இன்றைய விசேட அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விவாதத்தின்போது யாழ்.மாநகரசபையின் சட்டவிதிகளை மீறி மேற்கொள்ளப்பட்ட குறித்த ஒப்பந்தத்தின் சில விதிகளைத் தூக்கிப்பிடித்து குறித்த கட்டடத்திலிருந்து தாம் வெளியேறமாட்டோம் எனவும் யாழ்.மாநகரசபை விரும்பினால் வழக்குத் தொடருமாறும் ஈபிடிபி உறுப்பினர்கள் மேசை மீது அடித்து சவால் விடுத்தனர்.

எனினும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரான வை.கிருபாகரன் குறித்த கட்டடம் அமைப்பதில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முறைகேடுகளை ஆதாரங்களுடன் தொடர்ச்சியாக முன்வைத்திருந்தார்.

இதனால் நிலைகுலைந்த ஈபிடிபியினர் யாழ். மாநகரசபையின் முன்னாள் ஆணையாளர்கள் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள்மீது சேறுபூசல்களில் ஈடுபட்டனர். அவர்களே குறித்த விடையங்களைத் தவறாகக் கையாண்டதாகவும் ஓய்வுபெற்ற நீதியரசர்களால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கைகள் அம்புலிமாமா கதைகள் எனுவும் பெரும் சத்தத்துடன் கூறி சபை அமர்வை கலவரமாக்கினர்.

அதன்போது குறுக்கிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் கிருபாகரன் யாழ்.மாநகரசபையின் உறுப்பினர் ஒருவரது வாக்குமூலம் ஒன்றினை வாசித்துக் காட்டி குறித்த கட்டடம் அமைப்பதற்கான ஒப்பந்தம் ஈபிடிபியின் அலுவலகத்தில் வைத்தே மேற்கொள்ளப்பட்டது என்றும் தான் அங்கு அழைக்கப்பட்டு ஒப்பந்தத்தில் கைஒப்பமிட வைக்கப்பட்டதாகவும் கூறியதாக வாசித்தார். 

இதனையடுத்து குறிப்பிட்ட முதல்வர் அன்றைய காலகட்டத்தில் புறச் சூழல் மிக மோசமாக இருந்தது என்றும் அதனால் அதிகாரிகள் சில நடவடிக்கைகளில் வேறு வழியின்றி ஈடுபடவேண்டியிருந்தது எனவும் கூறினார்.

இதனால் மேலும் கொதிப்படைந்த ஈபிடிபி உறுப்பினர்கள் என்னபுறச் சூழல் என மிக ஆக்ரோசமாக கூச்சல் குழப்பங்களில் ஈடுபட்டனர். இதனால் சபை களோபரமானது. இதன்போது குறுக்கிட்ட முதல்வர் ஆர்னோல்ட் புறச் சூழல் என்றதும் நீங்கள் ஏன் கலவரமடைகிறீர்கள் நான் எந்தக் கட்சியையும் குறிப்பிட்டு குற்றஞ்சாட்வில்லை. அன்று புறச்சூழல் மோசமாக இருந்தது உண்மைதானே என்றார்.

நீண்டநேர விவாதத்தையடுத்து குறித்த கட்டடத் தொகுதியை யாழ் மாநகரசபை பொறுப்பேற்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ளவேண்டும் என்ற தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட ஈபிடிபி குறித்த கட்டடத்தின் மூன்றாம் மற்றும் நான்காம் தளங்களை மகேஸ்வரி நிதியத்திற்கு கையளிக்கவேண்டும் என நிபந்தனை விதித்தது.

குறித்த கட்டப் பணியினை மேற்கொண்டிருந்த நிறுவனம் மூன்றாம் நான்காம் தளங்களை மனேஸ்வரி நிதியத்திற்கு வழங்க இணங்கி அவர்களிடம் பணம் பெற்றே கட்டடப் பணியினை மேற்கொண்டது எனவும் அந்நிறுவனத்தினால் யாழ் மாநகரசபையுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர்களின் சிபாரிசான மகேஸ்வரி நிதியத்திற்கே மூன்றாம் மற்றும் நான்காம் தளங்களை வழங்க வேண்டும் என்றும் வாதிட்டனர்.

எனினும் அதற்கு பல உறுப்பினர்கள் உடன்பட மறுத்த நிலையில் கஸ்தூரியார் வீதிக்கு அருகாமையில் யாழ் மாநகரசபைக்குச் சொந்தமான காணியில் கடந்த ஈபிடிபி ஆட்சியின்போது தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு கட்டப்பட்ட கட்டதத்தை யாழ் மாநகரசபையின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு குறித்த தனியார் நிறுவனத்துடன் மேற்கொள்ளும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் 

யாழ்.மாநகரசபை முழுமையாகப் பொறுப்பேற்பது எனவும் அதன்பின்னர் இதுவரை வாடகைக்கு கொடுக்கப்படாத கடைத் தொகுதிகள் தொடர்பில் யாழ் மாநகரச சபை தீர்மானிக்க வேண்டும் என முன்னணியின் உறுப்பினர் கிருபாகரனும் அதன் தொடர்ச்சியாக முதல்வர் ஆர்னோல்ட்டும் முன்வைத்த கருத்துக்கள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன.

அதன்போது தாம் அதற்கு எதிர்ப்பு வெளியிடுவதாக ஈபிடிபியின் 11 உறுப்பினர்கள் தெரிவித்து வாதங்களில் ஈடுபட்டனர்.

எனினும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரான கிருபாகரனின் கடுமையான வாதங்களையடுத்து ஈபிடிபியின் 11 உறுப்பினர்களின் எதிர்ப்பினை மீறி குறித்த கட்டடத் தொகுதியை யாழ்.மாநகரசபை கையகப்படுத்தும் தீர்மானத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவு வழங்கின.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு