தெற்கில் சிங்கள மக்களுக்கு ஒரு முகத்தையும், வடக்கில் தமிழ் மக்களுக்கு மற்றொரு முகத்தையும் காட்டுகிறாரா..? சுரேன் ராகவன்..
வடமாகாண ஆளுநராக அண்மையில் பதவியேற்றிருக்கும் ஆளுநா் சுரேன் ராகவன் பதவியேற்று ள்ளாா். பதவியேற்று ஒரு மாதங்கள் கடந்திருக்கும் நிலையில், அவா் மீதான விமா்சனங்களும், அவா் மீதான நல்ல அபிப்பிராயங்களும் சமதளத்தில் எழுந்திருக்கின்றது.
இந்நிலையில் ஆளுநா் தொடா்பாக சமூக வலைத்தளத்தில் பொதுமகன் ஒருவா் எழுதியுள்ள விமா் சனத்தை அல்லது ஆளுநா் குறித்த அந்த பொதுமகனுடைய பாா்வையை பதிவேற்றியுள்ளாா். அதனை அப்படியே எமது தளத்தின் வாசகா்களுக்காக தருகிறோம்.
எமது இணைய தளத்தின் வாசகா்கள் பலருடைய வேண்டுகோளுக்கும், விருப்பத்திற்கும் அமைய இந்த பதிவை அப்படியே நாங்கள் இங்கே பதிவேற்றியுள்ளோம். இந்த பதிவு தொடா்பான பூரண விமா்சனங்கள், அல்லது ஆதரவான கருத்துக்களுக்கு நாம் பொறுப்பாளி அல்ல. (ஆசிாியா்)
வடக்கு ஆளுநர் டொக்டொர் ராகவன் அவர்கள் ஒவ்வொரு நாளும் தனது facebook பக்கத்தில் தான் பங்குபற்றும் நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் பற்றி பதிவிட்டு வருகிறார்
தமிழ் அரசியல் வாதிகள் பயன்படுத்த வேண்டிய facebook பக்கம் மாதிரி , அவர்களை விட சிறப்பாக பயன்படுத்தி வருகிறார்
அதில் சிலவற்றை தனி தமிழிலும் . சிலவற்றை முழுமையான சரியான ஆங்கில மொழி பெயர்ப்புடனும் , சிலவற்றை நுட்பமான ஆங்கில மொழி பெயர்ப்புடனும் , சிலவற்றை ஆங்கில , சிங்கள மொழி பெயர்ப்புடனும் பதிவிட்டு வருகிறார்
ஆனால் சில விடயங்களை நுட்பமாக தவிர்த்து வருகிறார் என்பது அவரது பதிவுகளை தொடர்ந்து அவதானித்து வருவதிலிருந்து தெரிகிறது
அண்மையில் வசந்தம் டிவி நிகழ்ச்சியில் Mathiaparanan Abraham Sumanthiran
அவர்கள் ஆளுநர் பற்றி குறிப்பிடும் போது " ஆளுநர் எங்கள் அரசியலுக்கு எதிரானவராக நான் நினைக்கல .
அவர் ஆளுநராக பதவியேற்ற பின் " இரு தேசங்களின் மக்களிடையே உறவுப்பாலமாக இருப்பேன் " என்று பதிவிட்டிருந்தார் என்று குறிப்பிட்டு ஆளுநருக்கு ஒரு வடிவம் கொடுக்க முனைந்தார்
ஆனால் டொக்ட்ர் சுரேன் ராகவன் இரு தேசங்கள் என்ற வார்த்தை பயன்படுத்தவே இல்ல . " நம் தேசத்தின் மக்களுக்கு சேவையாற்ற " என்றே ஆரம்பித்து அவர் பதிவிட்டிருந்தார் .
அதன் பின்னர் அவர் பதிவு செய்த பதிவுகளில் நான் முக்கியமாக கருதின பதிவு கேப்பாபுலவில் காணிக்காக போராடிய மக்களை சந்திச்சமையை குறிப்பிடுவேன்
அந்த பதிவை அவர் பின்வருமாறு தமிழில் பதிவு செய்திருந்தார் . " முல்லைத்தீவில் தங்கள் பூர்வீக காணிகளை விடுவிக்க கோரும் மக்களை சந்தித்து கதைத்தேன் " என்ற வகையில் பதிவிட்டிருந்தார் .
ஆனால் அதை ஆங்கில படுத்தும் போது வெறுமனவே I met people என்ற வகையில் பதிவிட்டிருந்தார் . அதற்கு கீழே நான் பின்வருமாறு கருத்திட்டிருந்தேன்
நல்ல விஷயம் - நல்ல முடிவு ஒன்றை பெற்று கொடுங்க
மற்றது ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளதில் விவரம் இல்லை . சரி பார்க்கவும் ( பூர்விக காணிகளை விடுவிக்க கோரும் மக்கள் என்பதை காணவில்லை )
ஆனால் தற்பொழுது அந்த பதிவை பார்த்த போது அந்த பதிவு எடிட் பண்ணப்பட்டிருக்கு . தமிழில் பூர்வீக காணிகளை என்று வந்த சொல் எடுக்கப்பட்டு தமது காணிகளை என்று மாற்றப்பட்டிருக்கு . அத்துடன் ஆங்கிலத்தில் எழுதப்பட்டதும் எடுக்கப்பட்டு விட்டது
கடந்த இரண்டு நாளைக்கு முன் காணிகள் விட்ட பதிவு ஒன்றை போட்டு அதில் " நான் ஆளுநராக வந்த ஒருமாதம் கடந்தும் கூட என்னை நன்கறிந்த பல நண்பர்கள் எந்தவித வாழ்த்துக்களும் சொல்லவில்லை .
இருந்தும் நான் செய்ய வேண்டியவற்றை செய்து கொண்டே போகிறேன் " என்று பதிவிட்டு அதை ஆங்கில மொழி பெயர்ப்புடன் தனது சொந்த facebook இல் பதிவிட்டிருந்தார்
அதில் போய் நான் " ஏற்கனவே விடுகிறது என்று முடிவெடுத்த காணிகளை உங்க இடத்தில யார் இருந்தாலும் அவரூடாக விடப்பட்டு தானிருக்கும்
கேப்பாபுலவில் போராடுற மக்களின் காணியை விடுவியுங்க ஒத்துக்கொள்கிறோம் உங்களால் தான் முடிந்தது என்று என கருத்திட்டேன்
அதுக்கு அவர் " i dont have any proof . What i do ? " என்று பதிவிட்டிருக்கிறார்
அதுக்கு நான் என்ன பதில் சொன்னேன் என்பதை அங்கே போய் பார்த்து கொள்ளுங்கள்
" ஆளுநர் ராகவன் தனது படித்த அறிவை கொண்டு மிகவும் சாதுரியமாக எதை தவிர்க்கனுமோ அதை தவிர்த்து , எதை எதை செய்யலாமோ அதை செய்து அதை பெரிதாக காட்டிக்கொண்டிருக்கிறார் .
தமிழர்க்கு தமிழருக்கு ஏற்ற வகையிலும் சிங்களவர்களுக்கு இன்னொரு விதத்திலும் செய்திகளை கொண்டு போய் சேர்க்கிறார் என்றே நினைக்கிறேன்
தொடர்ந்தும் அவரை அவதானித்து கொண்டிருப்பேன்.
நன்றி
முள்ளா சாந்தன்
10 /02 /2019